சாஸ்திரிக்கு சம்பள உயர்வு..? வாரிவழங்கும் பிசிசிஐ

By karthikeyan VFirst Published Sep 9, 2019, 1:32 PM IST
Highlights

இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளரை தவிர மற்ற அனைவருமே அதே பதவியில் நீட்டிக்கப்பட்டனர். இந்திய அணிக்கு மேலும் 2 ஆண்டுகளுக்கு ரவி சாஸ்திரியே தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 

இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவின் பதவிக்காலம் வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் முடிந்த நிலையில், அவர்களது பதவிக்காலம் முடியும் முன்னர், புதிய பயிற்சியாளர்களுக்கான நேர்காணல் நடத்தப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்பட்டனர். 

இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளரை தவிர மற்ற அனைவருமே அதே பதவியில் நீட்டிக்கப்பட்டனர். இந்திய அணியில் மேலும் 2 ஆண்டுகளுக்கு ரவி சாஸ்திரியே தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். பவுலிங் பயிற்சியாளராக பரத் அருணும் ஃபீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதரும் மீண்டும் நியமிக்கப்பட்டனர். பேட்டிங் பயிற்சியாளராக இருந்த சஞ்சய் பங்கார் மட்டும் கழட்டிவிடப்பட்டு விக்ரம் ரத்தோர் புதிய பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில், மீண்டும் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ரவி சாஸ்திரிக்கு சம்பள உயர்வு வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் கடந்த முறை ரூ.8 கோடிக்கு ஒப்பந்தமாகியிருந்தார். இந்நிலையில், மீண்டும் அந்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ள சாஸ்திரிக்கு 20% வரை ஊதிய உயர்வு வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. எனவே அவரது ஊதியம் ரூ.8 கோடியிலிருந்து ரூ.9.5கோடி-ரூ.10 கோடியாக உயர வாய்ப்புள்ளது. 

அதேபோல பவுலிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளராக மீண்டும் தொடரும் பரத் அருண் மற்றும் ஸ்ரீதருக்கு ரூ.3.5 கோடி வரை ஊதியம் கிடைக்க வாய்ப்புள்ளது.
 

click me!