இதெல்லாம் சுத்த முட்டாள்தனம்.. செம கடுப்பான சாஸ்திரி

By karthikeyan VFirst Published Sep 12, 2019, 11:19 AM IST
Highlights

இந்திய அணியில் ரோஹித் சர்மாவுக்கும் விராட் கோலிக்கும் இடையே பனிப்போர் நடந்துவருவதாக கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே பேச்சு அடிபட்டுவருகிறது. 
 

இந்திய அணியில் ரோஹித் சர்மாவுக்கும் விராட் கோலிக்கும் இடையே பனிப்போர் நடந்துவருவதாக கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே பேச்சு அடிபட்டுவருகிறது. 

இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன் கோலி மற்றும் துணை கேப்டன் ரோஹித் ஆகிய இருவருக்கும் இடையே மோதல் இருந்துவருவதாக பேசப்பட்டுவருகிறது. இருவரும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாவிட்டாலும் இருவருக்கும் இடையே பனிப்போர் நடப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளிவருகின்றன. 

உலக கோப்பைக்கு பின்னர், இந்த விவகாரம் முற்றியது. ரோஹித்துக்கும் கோலிக்கும் இடையே மோதல் இருப்பதாக செய்திகள் பரவியதை அடுத்து, இந்திய அணியில் அசாதாரண சூழல் நிலவுவதாகவும் உலக கோப்பை தோல்விக்கும் அதுவும் கூட காரணமாக இருக்கலாமோ என்ற வகையில் கருத்துகள் உலாவந்தன. 

ஆனால் ஏற்கனவே பலமுறை, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று கேப்டன் கோலியும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் விளக்கமளித்துள்ள நிலையில், உலக கோப்பைக்கு பின்னர் மீண்டும் விளக்கமளித்தார் கோலி.  உலக கோப்பைக்கு பின் ரோஹித் - கோலி மோதல் குறித்த செய்தி வைரலான நிலையில், வெஸ்ட் இண்டீஸிற்கு கிளம்புவதற்கு முன், செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் கோலி, மோதலெல்லாம் இல்லை என்று உறுதியாக கூறினார். 

ஆனால் இதுகுறித்து ஒருமுறை கூட ரோஹித் சர்மா மறுப்பு தெரிவிக்கவில்லை. இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ரோஹித் - கோலி மோதல் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து விளக்கமளித்த ரவி சாஸ்திரி, நான் இந்திய அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இருந்துவருகிறேன். வீரர்கள் எப்படி ஆடுகின்றனர், ஒருவருக்கொருவர் எவ்வளவு ஆதரவாக இருக்கின்றனர் என்பதையெல்லாம் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அப்படியிருக்கையில், ரோஹித்துக்கும் கோலிக்கும் இடையே மோதல் என்று கூறுவது சுத்த முட்டாள்தனமானது. 

நான் அவர்களுடனேயே இருக்கிறேன், அவர்கள் எப்படி ஆடுகிறார்கள் என்பது எனக்கு தெரியும். ஒருவேளை இருவருக்கும் இடையே மோதல் இருந்தால், ரோஹித் ஏன் உலக கோப்பையில் 5 சதம் அடிக்கவேண்டும்? இருவரும் எப்படி நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைக்க முடியும்? என கேள்வி எழுப்பிய சாஸ்திரி, ரோஹித் - கோலி இடையே மோதல் என்ற தகவலை முற்றிலுமாக மறுத்தார். 

மேலும் தொடர்ந்து பேசிய சாஸ்திரி, அணியில் இருக்கும் அனைத்து வீரர்களுமே அவரவர் கருத்துகளை தெரிவிப்பார்கள். அனைவரின் கருத்துமே ஒரேமாதிரியாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துகளை தெரிவிப்பர். உடனே அதை மோதல் என்று சொல்லக்கூடாது. கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்யும். அனைவரும் கருத்து தெரிவிக்கும்போதுதான், சில நல்ல ஐடியாக்கள் கிடைக்கும் என்றார். 
 

click me!