Asia Cup: அவரை எடுக்காததுதான் இந்திய அணியின் தோல்விக்கு காரணம்! ராகுல் டிராவிட், ரோஹித்தை விளாசிய ரவி சாஸ்திரி

By karthikeyan VFirst Published Sep 8, 2022, 7:03 PM IST
Highlights

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் முகமது ஷமியை எடுக்காததை கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.
 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. டி20 உலக கோப்பைக்கு சிறந்த முன் தயாரிப்பாக இந்த ஆசிய கோப்பை தொடர் இருக்கும் என்பதால், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

லீக் சுற்றில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளை வீழ்த்திய இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான்  மற்றும் இலங்கை அணிகளிடம் தோற்று தொடரைவிட்டு வெளியேறி ஏமாற்றமளித்தது.

இதையும் படிங்க - பேட்டிங், பவுலிங்கில் கலக்கிய மிட்செல் ஸ்டார்க்!2வது ODIயிலும் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா

இந்திய அணி இந்த ஆசிய கோப்பையில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சொதப்பியது. குறிப்பாக பவுலிங்கில் படுமோசமாக சொதப்பியது. பும்ரா, ஹர்ஷல் படேல் ஆகிய இருவரையும் இந்திய அணி மிஸ் செய்தது. பும்ராவும் ஹர்ஷல் படேலும் காயத்தால் ஆடமுடியாத போதிலும் கூட, சீனியர் பவுலரான முகமது ஷமி இந்திய அணியில் எடுக்கப்படவில்லை.

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோதே, ஷமி இல்லாதது விமர்சனத்துக்குள்ளானது. கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பைக்கு பின் முகமது ஷமி இந்திய டி20 அணியில் எடுக்கப்படவேயில்லை. இந்தியாவில் நடந்த நியூசிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்களில் ஷமி இந்திய அணியில் எடுக்கப்படவில்லை. 

அதேபோல அயர்லாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணங்களிலும் ஷமி இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. ஷமியை இந்திய அணி நிர்வாகமும், தேர்வாளர்களும் டி20 பவுலராக பார்க்கவில்லை. 

ஆனால் சீனியர் ஃபாஸ்ட் பவுலரான ஷமி பந்தின் சீமை பயன்படுத்தி அருமையாக பந்துவீசவல்லவர். ஐபிஎல்லில் அறிமுக சீசனிலேயே கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியில் முக்கிய பங்காற்றியவர். ஆனால் அவரை ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் எடுக்காததை ரவி சாஸ்திரி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ரவி சாஸ்திரி, ஆசிய கோப்பைக்கான அணியில் முகமது ஷமியை எடுக்காதது எனக்கு பெரும் வியப்பாக இருந்தது. ஷமி இந்திய அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்களால் ஒதுக்கப்படுகிறார். ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஷமி கண்டிப்பாக இடம்பெற்றிருக்க வேண்டும். ஷமி இல்லாததால் இந்திய அணி பலவீனமான பவுலிங் யூனிட்டாக காட்சியளித்தது. 

இதையும் படிங்க - ஹர்பஜன், உங்களுக்கு அவங்க 2 பேரையும் எடுக்கலைங்குறது பிரச்னையா? இல்ல அஷ்வினை எடுத்தது பிரச்னையா?

கடந்த ஆண்டு அமீரகத்தில் நடந்த டி20 உலக கோப்பையில் பனி எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியது என்று பார்த்தோம். ஸ்பின்னர்கள் கண்டிப்பாக சிறப்பாக செயல்படமுடியாது. எனவே ஆசிய கோப்பையில் ஷமி கண்டிப்பாக சிறந்த சாய்ஸாக இருந்திருப்பார் என்று ரவி சாஸ்திரி தெரிவித்தார். 
 

click me!