பேட்டிங், பவுலிங்கில் கலக்கிய மிட்செல் ஸ்டார்க்!2வது ODIயிலும் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா

By karthikeyan VFirst Published Sep 8, 2022, 5:58 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 2-0 என ஒருநாள் தொடரை வென்றது.
 

நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இன்று நடந்த 2வது போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெற்று தொடரை வென்றது.

இன்று நடந்த 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் மட்டுமே சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். ஸ்மித் அபாரமாக பேட்டிங் ஆடி 61 ரன்கள் அடித்தார்.

இதையும் படிங்க - ஹர்பஜன், உங்களுக்கு அவங்க 2 பேரையும் எடுக்கலைங்குறது பிரச்னையா? இல்ல அஷ்வினை எடுத்தது பிரச்னையா?

வார்னர்(5), ஃபின்ச் (0), லபுஷேன்(5), மார்கஸ் ஸ்டோய்னிஸ் (0), அலெக்ஸ் கேரி(12), மேக்ஸ்வெல் (25) என அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், 148 ரன்களுக்கே ஆஸ்திரேலிய அணி 9விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஆனால் மிட்செல் ஸ்டார்க்கும் ஹேசில்வுட்டும் கடைசி விக்கெட்டுக்கு சிறப்பாக பேட்டிங் ஆடியதால் 50 ஓவரில் 195 ரன்களை எட்டியது ஆஸ்திரேலிய அணி. மிட்செல் ஸ்டார்க் 38 ரன்களும், ஹேசில்வுட் 23 ரன்களும் அடித்தனர்.

196 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக ஆஸ்திரேலிய ஸ்பின்னர் ஆடம் ஸாம்பாவின் சுழலை சமாளிக்க முடியாமல் 5 வீரர்கள் அவரது பவுலிங்கிலேயே ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாகவே கேப்டன் வில்லியம்சன் 17 ரன்கள் தான் அடித்தார். மற்ற அனைவரும் அதுகூட அடிக்காததால் 33 ஓவரில் வெறும் 83 ரன்களுக்கு ஆல் அவுட்டானது நியூசிலாந்து அணி.

இதையும் படிங்க - IND vs AFG: உப்புச்சப்பில்லாத மொக்கை மேட்ச்சுக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 2-0 என ஒருநாள் தொடரை வென்றது. இந்த போட்டியில் பேட்டிங்கில் 38 ரன்கள் அடித்ததுடன், பவுலிங்கும் சிறப்பாக வீசி 2 விக்கெட் வீழ்த்திய மிட்செல் ஸ்டார்க் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
 

click me!