ஹர்பஜன், உங்களுக்கு அவங்க 2 பேரையும் எடுக்கலைங்குறது பிரச்னையா? இல்ல அஷ்வினை எடுத்தது பிரச்னையா?

By karthikeyan VFirst Published Sep 8, 2022, 5:11 PM IST
Highlights

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இலங்கைக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணி தேர்வை கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்.
 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் நிலையில், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய 2 அணிகளிடமும் சூப்பர் 4 சுற்றில் தோற்று தொடரைவிட்டு வெளியேறியது இந்திய அணி.

டி20 உலக கோப்பைக்கு முன் ஆசிய கோப்பை தொடர் இந்திய அணிக்கு சிறந்த தயாரிப்பாக இருக்கும் என கருதப்பட்ட நிலையில், இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் இலங்கையிடம் தோற்று ஏமாற்றமளித்தது.

இதையும் படிங்க - IND vs AFG: உப்புச்சப்பில்லாத மொக்கை மேட்ச்சுக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

இலங்கைக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா 41 பந்தில் 72 ரன்களை குவித்தும் 20 ஓவரில் இந்திய அணி 173 ரன்கள் மட்டுமே அடித்தது. 174 ரன்கள் என்ற இலக்கை அடித்து இலங்கை அணி வெற்றி பெற்றது. அந்த போட்டியில் தோற்றதன்மூலம் தொடரை விட்டு வெளியேறியது இந்திய அணி. 

ரோஹித் சர்மா நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் படுமோசமாக சொதப்பியதால் தான் இந்திய அணியால் இன்னும் பெரிய ஸ்கோரை அடிக்க முடியாமல் போனது. தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ரிஷப் பண்ட் எடுக்கப்பட்டது கடும் விமர்சனத்துக்குள்ளானது.

ரிஷப் பண்ட் பேட்டிங்கில் மட்டுமல்லாது விக்கெட் கீப்பிங்கிலும் சொதப்பினார். இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனே சரியில்லை என்றும், டி20 உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில், இன்னும் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை செட் செய்யாமல் பரிசோதனைகளை செய்துவருவதும் விமர்சனத்துக்குள்ளானது.

இந்நிலையில், இந்திய அணியின் தேர்வை முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங், இந்திய அணியில் மனரீதியில் சில பிரச்னைகள் உள்ளன. ஆசிய கோப்பையில் நன்றாக ஆடிக்கொண்டிருந்தபோது, இந்திய அணி பரிசோதனைகளை செய்திருக்கக்கூடாது. அஷ்வினை மீண்டும் அணியில் எடுக்கும்போது, நன்றாக ஆடிய இளம் ரவி பிஷ்னோய் மற்றும் தினேஷ் கார்த்திக்கை ஏன் ஆடவைத்திருக்கக்கூடாது. அவர்கள் இருவருமே ஐபிஎல்லில் இருந்து நன்றாக ஆடிவருகின்றனர். அவர்களை அணியில் எடுத்திருக்கவேண்டும்.

இதையும் படிங்க- ஸ்டேடியத்தில் செம சண்டை.. அடித்துகொண்ட ஆஃப்கான் - பாக்., ரசிகர்கள்..! வைரல் வீடியோ

பேட்டிங்கில் இந்திய அணி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்லை. மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்புகிறது. டாப் ஆர்டர் நன்றாக ஆடினால் மிடில் ஆர்டர் சரியாக ஆடுவதில்லை. மிடில் ஆர்டர் நன்றாக ஆடினால் டாப் ஆர்டர் சரியாக ஆடுவதில்லை என்றார் ஹர்பஜன் சிங்.
 

 

click me!