உலக கோப்பை ஜெயிச்சாதான் எனக்கு கல்யாணம்..! அடம்பிடிக்கும் ஆஃப்கான் வீரர்

Published : Jul 12, 2020, 05:34 PM IST
உலக கோப்பை ஜெயிச்சாதான் எனக்கு கல்யாணம்..! அடம்பிடிக்கும் ஆஃப்கான் வீரர்

சுருக்கம்

ஆஃப்கானிஸ்தான் அணிக்கு உலக கோப்பையை வென்று கொடுத்த பின்னர் தான் திருமணம் செய்துகொள்ளப்போவதாக ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.   

21 வயதே ஆன ஆஃப்கானிஸ்தானின் இளம் வீரர் ரஷீத் கான், தன் கிரிக்கெட் கெரியரின் ஆரம்பத்திலேயே சர்வதேச அளவில் மிகப்பிரபலமடைந்துவிட்டார். ரிஸ்ட் ஸ்பின்னரான அவர், 16 வயதிலேயே ஆஃப்கானிஸ்தான் அணியில் அறிமுகமாகிவிட்டார். 

2015ம் ஆண்டு ஆஃப்கானிஸ்தான் அணியில் அறிமுகமான ரஷீத் கான், 3 விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் நட்சத்திர வீரராக ஜொலித்துவருகிறார். இளம் வயதிலேயே, ஜாம்பவான் பேட்ஸ்மேன்களை எல்லாம் தனது சுழலின் மூலம் திணறடித்துவருகிறார். 

பவுலிங்கில் மட்டுமல்லாமல், பேட்டிங்கிலும் இக்கட்டான நேரத்தில் கைகொடுக்கக்கூடியவர் ரஷீத் கான். தரமான ஆல்ரவுண்டராக வலம் வருகிறார். ஐபிஎல் உட்பட கிட்டத்தட்ட உலகின் அனைத்து டி20 லீக் தொடர்களிலும் ஆடிவரும் ரஷீத் கான், உலகளவில் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றிருக்கிறார்.  

ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரராக வளர்ந்துள்ள ரஷீத் கான், இதுவரை 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 20 விக்கெட்டுகளையும் 71 ஒருநாள் போட்டிகளில் ஆடி 133 விக்கெட்டுகளையும் 41 டி20 போட்டிகளில் ஆடி 79 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 

ஆஃப்கானிஸ்தான் அணியின் எதிர்காலமாக திகழும் ரஷீத் கான், தனது நாட்டுக்காகவும் அணிக்காகவும் பெரிதாக சாதித்து பெருமை சேர்க்க வேண்டும் என்ற வேட்கையில் உள்ளார். இந்நிலையில், ஆஃப்கானிஸ்தான் அணிக்கு உலக கோப்பையை வென்று கொடுத்த பின்னர் தான் தனக்கு திருமணம் என்று தெரிவித்துள்ளார் ரஷீத் கான். 

ஒருநாள் உலக கோப்பையா, டி20 உலக கோப்பையா என்று ரஷீத் கான் சொல்லவில்லை. அவரை பொறுத்தமட்டில், ஏதாவது ஒரு உலக கோப்பையை ஆஃப்கானிஸ்தான் அணிக்கு வென்று கொடுப்பதுதான் அவரது லட்சியமாக உள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!