ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது உலகக் கோப்பை போட்டி சம்பளம் முழுவதையும் வழங்குகிறேன் என்று ரஷீத் கான் அறிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான கிரிக்கெட் உலகக் கோப்பையின் 9ஆவது லீக் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிடி பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து இரு அணி வீரர்களும் தேசிய கீத பாடலுக்காக மைதானத்திற்குள் வந்தனர்.
அப்போது ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையிலும் அனைத்து வீரர்களும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு தேசிய கீத பாடல் ஒலிக்கப்பட்டது. அதன் பிறகு ஆப்கானிஸ்தான் வீரர்கள் கையில் கறுப்பு பட்டை அணிந்து விளையாடினர். ஆப்கானிஸ்தான் வடமேற்கில் 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹெராட் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.3ஆக பதிவானது.
இதையடுத்து அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் ஏற்படவே கட்டிடங்கள், வீடுகள் இடிந்து தரைமட்டமானது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 2400 கடந்துள்ளது. மேலும், 2000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடு, 1300க்கும் அதிகமான வீடுகள் இடிந்துள்ளன.
I learned with great sadness about the tragic consequences of the earthquake that struck the western provinces (Herat, Farah, and Badghis) of Afghanistan.
I am donating all of my match fees to help the affected people.
Soon, we will be launching a fundraising campaign to… pic.twitter.com/dHAO1IGQlq
இந்த நிலையில் தான் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் உலகக் கோப்பையில் தான் பெறும் சம்பளம் அனைத்தையும் ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, விரைவில், தேவைப்படும் மக்களுக்கு ஆதரவளிக்கக் கூடியவர்களை அழைத்து நிதி திரட்டும் பிரச்சாரத்தை நாங்கள் தொடங்குவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.