இந்தியாவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான 9ஆவது லீக் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு டெல்லியில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ரவிச்சந்திரன் அஸ்வினுக்குப் பதிலாக ஆல்ரவுண்டரான ஷர்துல் தாக்கூர் அணியில் இடம் பெற்றுள்ளார்.
இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா இன்று தனது 30ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மைதானத்தில் பயிற்சியின் போது ஹர்திக் பாண்டியா கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். மேலும், கேக் வெட்டி அதனை இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் காம்பீருக்கும் ஊட்டி விட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான்:
ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் ஜத்ரன், ரஹ்மத் ஷா, ஹஷ்மதுல்லா ஷாஹிடி (கேப்டன்), முகமது நபி, நஜ்புல்லா ஜத்ரன், அஸ்மதுல்லா உமர்சாய், ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபசல்ஹக் ஃபாரூக்கி.
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ்.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இந்தப் போட்டி நடக்கிறது. இதற்கு முன்னதாக நடந்து முடிந்த 4ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்பிற்கு 428 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இலங்கை கடைசி வரை போராடி 326 ரன்கள் எடுத்து 102 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதுவரையில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் 3 ஒரு நாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில், இந்தியா 2 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியானது டையில் முடிந்துள்ளது.
இந்தியா – ஆப்கானிஸ்தான் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச ஸ்கோர்:
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா அதிகபட்சமாக 252 ரன்கள் குவித்துள்ளது. 252/10, 49.5 ஓவர்கள் – போட்டி டிரா 2018
இந்தியா குறைந்தபட்ச ஸ்கோர் – 224/8, 50 ஓவர்கள் – இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி – 2019
ஆப்கானிஸ்தான் அதிகபட்ச ஸ்கோர் – 252/8, 50 ஓவர்கள் – போட்டி டிரா – 2018
ஆப்கானிஸ்தான் குறைந்தபட்ச ஸ்கோர் – 159, 45.2 ஓவர்கள் – 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி -2014
இந்திய அணியின் தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் – விராட் கோலி 67 ரன்கள்
இந்திய அணியின் சிறந்த பவுலிங் – ரவீந்திர ஜடேஜா – 4/30, 10 ஓவர்கள்
ஆப்கானிஸ்தான் அதிகபட்ச ஸ்கோர் – முகமது ஷாசாத் – 124 ரன்கள் (116 பந்துகள்)
ஆப்கானிஸ்தான் சிறந்த பவுலிங் – முகமது நபி – 2/33 (9 ஓவர்கள்)
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கேஎல் ராகுல் 2 போட்டிகளில் விளையாடி 90 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 60 ரன்கள் எடுத்திருக்கிறார்.