IPL 2023: ரஷீத் கான் வயிற்றில் இடித்த சர்ப்ஃராஸ் கான்; வேண்டுமென்றே நடந்ததா?

By Rsiva kumar  |  First Published Apr 5, 2023, 10:00 AM IST

டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையிலான போட்டியின் போது சர்ஃபிராஸ் கான் ரன் ஓடும் போது குறுக்கில் நின்றிருந்த ரஷீத் கான் வயிற்றில் மோதயுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 


ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழாவின் 16ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா 7 ரன்களுக்கும், மிட்செல் மார்ஷ் 4 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். நிதானமாக நின்று ஆடிய டேவிட் வார்னரும் 37 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ரைலீ ரூசோ ரன்னே அடிக்காமல் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டானார். 

IPL 2023: வாக்கிங் ஸ்டிக் உதவியோடு காலை தூக்கிக் கொண்டு நடந்து சென்ற கேன் வில்லியம்சன்!

Tap to resize

Latest Videos

சர்ஃப்ராஸ் கான் மட்டும் நின்று பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு கட்டத்தில் ரஷீத் கான் பந்தை அடித்துவிட்டு ரன் எடுக்க ஓடிய போது, ரஷீத் கான் பந்தை பிடிக்கும் முயற்சியில் இறங்க, அப்போது ரஷீத் கான் வயிற்றில் சர்ஃபராஸ் கான் கையால் குத்தியுள்ளார். இதனால், வலி தாங்க முடியாமல் துடித்த ரஷீத் கான் அப்படியே கீழே படுத்துவிட்டார். அதன்பிறகு ரஷீத் கானை பார்த்து அவரிடம் மன்னிப்பு கேட்டார். 

IPL 2023: தோனி ஓய்வு பெற்றதால் தான் ரிஷப் பண்ட் கிடைத்தார் - கங்குலி!

ஆனால், இது எதிர்பாராமல் நடந்த விபத்து என்பதால், சர்ஃப்ராஸ் கான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், சர்ஃப்ராஸ் கான் அடித்து ஆட முயற்சித்த போது பந்து அவரது தலையில் பதம் பார்த்தது. இதையடுத்து மருத்துவர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். எனினும், முதலில் ஆடிய டெல்லி கேபிடல்ஸ் இந்தப் போட்டியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, எளிய இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி 18.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

IPL 2023: டெல்லி அணிக்காக காயத்தையும் பொருட்படுத்தாமல் ஆதரவு தர வரும் ரிஷப் பண்ட்!

இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் தனது 2ஆவது வெற்றியை பதிவு செய்தது. டெல்லி கேபிடல்ஸ் தனது 2ஆவது தோல்வியை பதிவு செய்துள்ளது. ரிஷப் பண்ட் இல்லாதது பெரிய குறையாகவே இன்னும் பார்க்கப்படுகிறது. 

click me!