IPL 2023: வாழ்வா சாவா போட்டியில் RR - PBKS பலப்பரீட்சை..! ராஜஸ்தான் அணியில் அதிரடி மாற்றங்கள்

By karthikeyan V  |  First Published May 19, 2023, 7:38 PM IST

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 
 


ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், குஜராத் டைட்டன்ஸ் மட்டுமே பிளே ஆஃபிற்கு முன்னேறீயுள்ளது. எஞ்சிய 3 இடங்களுக்கு லக்னோ, சிஎஸ்கே, மும்பை, ஆர்சிபி அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தலா 13 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் அணிகளுக்கு பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பு மிக மிகக்குறைவு. இருந்தாலும் பின்புற வாய்ப்பு ஒன்று இருக்கிறது. குறைந்தபட்சம் அதையாவது தக்கவைக்க,  வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

Latest Videos

தர்மசாலாவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஜோ ரூட் நீக்கப்பட்டு டிரெண்ட் போல்ட் சேர்க்கப்பட்டுள்ளார். ஆடம் ஸாம்பா மற்றும் டிரெண்ட் போல்ட் இருவரில் ஒருவர் மட்டுமே ஆடும் லெவனில் இதுவரை இடம்பெற்றுவந்த நிலையில், இந்த போட்டியில் இருவரும் சேர்ந்து ஆடுகின்றனர். அஷ்வின் காயம் காரணமாக ஆடமுடியாததால் ஆடும் லெவன் காம்பினேஷனில் அதற்கேற்ப சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

அஷ்வினுக்கு பதிலாக ஃபாஸ்ட் பவுலர் நவ்தீப் சைனி ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். ஜோ ரூட் நீக்கப்பட்டதால் பேட்டிங்கில் அவரது இடத்தை நிரப்ப ரியான் பராக் ஆடுகிறார். 

பஞ்சாப் கிங்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்குகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி: 

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன்), தேவ்தத் படிக்கல், ரியான் பராக், ஷிம்ரான் ஹெட்மயர், ஆடம் ஸாம்பா, டிரெண்ட் போல்ட், நவ்தீப் சைனி, சந்தீப் ஷர்மா, சாஹல்.

பஞ்சாப் கிங்ஸ் அணி: 

ஷிகர் தவான் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், அதர்வா டைட், லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன், ஜித்தேஷ் ஷர்மா, ஷாருக்கான், ஹர்ப்ரீத் பிரார், ராகுல் சாஹர், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங். 
 

click me!