GT vs RR: ஃபைனலில் டாஸ் வென்ற சாம்சன்; எங்க பலத்துக்கு நாங்க ஆடுறோம்! RR துணிச்சல் முடிவு; GT-யில் ஒரு மாற்றம்

Published : May 29, 2022, 07:48 PM IST
GT vs RR: ஃபைனலில் டாஸ் வென்ற சாம்சன்; எங்க பலத்துக்கு நாங்க ஆடுறோம்! RR துணிச்சல் முடிவு; GT-யில் ஒரு மாற்றம்

சுருக்கம்

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.  

ஐபிஎல் 15வது சீசன் ஃபைனல் இன்று நடக்கிறது. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் ஃபைனலில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸும் மோதுகின்றன.

இந்த 2 அணிகளும் இந்த சீசனில் இதற்கு முன் மோதிய 2 போட்டிகளிலும் குஜராத் டைட்டன்ஸ் அணியே வெற்றி பெற்றது. எனவே அந்த வெற்றியை ஃபைனலிலும் பெற்று கோப்பையை வெல்லும் முனைப்பில் குஜராத் அணியும், ஏற்கனவே வாங்கிய 2 அடிக்கு ஃபைனலில் பதிலடி கொடுத்து கோப்பையை வெல்லும் முனைப்பில் ராஜஸ்தான் அணியும் களமிறங்கியுள்ளன.

இந்த சீசனில் புதிதாக களமிறங்கியுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் சீசனிலேயே கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.

ஃபைனலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். குஜராத் டைட்டன்ஸ் அணி சேஸிங்கில் வலுவான அணி. சேஸிங்கில் அந்த அணி அதிகமான வெற்றிகளை பெற்றிருந்தாலும், தங்கள் அணியின் பலம் முதலில் பேட்டிங் ஆடுவதுதான் என்பதால் துணிச்சலுடன் பேட்டிங்கை தேர்வு செய்தார் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன்.
 
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டிகளில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கியுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், ரவி அஷ்வின், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, ஒபெட் மெக்காய், யுஸ்வேந்திர சாஹல்.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அல்ஸாரி ஜோசஃபிற்கு பதிலாக லாக்கி ஃபெர்குசன் சேர்க்கப்பட்டுள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ் அணி:

ஷுப்மன் கில், ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), மேத்யூ வேட், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், லாக்கி ஃபெர்குசன், சாய் கிஷோர், முகமது ஷமி, யஷ் தயால்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

டி20 உலகக்கோப்பை: இந்திய அணி நாளை அறிவிப்பு.. கில் Vs சஞ்சு Vs இஷான் கிஷன்.. வலுக்கும் போட்டி
Ind Vs SA: மீண்டும் ஓபனராக களம் இறக்கப்படும் சஞ்சு சாம்சன்..? தொடரைக் கைப்பற்றும் இந்தியா..?