#RRvsKKR இதுதான் உனக்கு கடைசி சான்ஸ்.. இனியும் சொதப்புனா நீ காலி..! உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

By karthikeyan VFirst Published Apr 24, 2021, 2:57 PM IST
Highlights

கேகேஆர் அணிக்கு எதிரான இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கேகேஆர் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே இந்த சீசனை படுமோசமாக தொடங்கியுள்ளன. இரு அணிகளுமே அவை ஆடிய முதல் 4 போட்டிகளில் தலா ஒரு வெற்றியை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களில் உள்ளன.

எனவே 2வது வெற்றியை பெறும் முனைப்பில் கேகேஆர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடேவில் நடக்கும் இந்த போட்டியில் களமிறங்கும் உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பார்ப்போம்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியை சந்தித்திருந்தாலும் அந்த அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. கடந்த போட்டிகளில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும். 

ராஜஸ்தான் அணியில் ஒரு வீரர் கூட தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்லை. முதல் போட்டியில் மட்டும் சதமடித்த கேப்டன் சஞ்சு சாம்சன், அதன்பின்னர் ஆடிய 3 போட்டிகளில் 26 ரன்கள் மட்டுமே அடித்தார். அதேபோல தொடக்க வீரர் மனன் வோரா, 4 போட்டிகளில் சேர்த்தே மொத்தமாக 42 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். வோரா திறமையான பேட்ஸ்மேன் தான் என்றாலும், தவறான ஷாட்டுக்கு போயே ஆட்டமிழந்துவிடுகிறார்.

ராஜஸ்தான் அணியில் மற்றொரு தொடக்க வீரரான யஷஸ்வி  ஜெய்ஸ்வால் இருந்தும் கூட, மனன் வோரா சொதப்ப சொதப்ப அவர் மீது நம்பிக்கை வைத்து தொடர் வாய்ப்பளித்துவருகிறது அந்த அணி நிர்வாகம். ஆனால் இன்றைய போட்டியிலும் அவர் சொதப்பும்பட்சத்தில், அடுத்த போட்டிக்கான அணியில் இடத்தை இழந்துவிடுவார். இன்றைய போட்டியில் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்றே தெரிகிறது.

உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஜோஸ் பட்லர், மனன் வோரா, சஞ்சு சாம்சன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, டேவிட் மில்லர், ரியான் பராக், ராகுல் டெவாட்டியா, கிறிஸ் மோரிஸ், ஷ்ரேயாஸ் கோபால், சேத்தன் சக்காரியா, முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.
 

click me!