IPL 2023: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்

By karthikeyan VFirst Published Dec 31, 2022, 3:57 PM IST
Highlights

ஐபிஎல் 16வது சீசனில் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 16வது சீசனுக்கான ஏலம் கொச்சியில் கடந்த 23ம் தேதி நடந்தது. ஏலத்தில் ஆல்ரவுண்டர்களுக்குபெரிய கிராக்கி இருந்தது. இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரன் அதிகபட்சமாக ரூ.18.5 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீனை ரூ.17.5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியும். இங்கிலாந்து சீனியர் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு சிஎஸ்கே அணியும் ஏலத்தில் எடுத்தன.

இந்த ஏலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர். அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. ஏற்கனவே சஞ்சு சாம்சன் கேப்டன்சியில் ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வா, ஷிம்ரான் ஹெட்மயர், தேவ்தத் படிக்கல், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, அஷ்வின், சாஹல் என கோர் அணி வலுவாக செட் ஆகிவிட்ட நிலையில், ஆடும் லெவனும் ஏற்கனவே கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டது. 

ஆண்டுக்கு ரூ.1770 கோடி சம்பளம்.. ரொனால்டோவை ஒப்பந்தம் செய்த சௌதி அரேபிய கிளப் அணி

இந்த ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களில் ஹோல்டரை தவிர மற்ற வீரர்கள் பிரதான ஆடும் லெவனில் இருக்க வாய்ப்பில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக ஆடுவார்கள். அதன்பின்னர் சஞ்சு சாம்சன், தேவ்தத் படிக்கல், ஷிம்ரான் ஹெட்மயர் ஆகியோர் இறங்குவார்கள்.

இளம் வீரர் ரியான் பராக் ஆட்டத்தின் சூழலுக்கேற்ப பேட்டிங் ஆர்டர் மாற்றி இறக்கப்படுவார்.  ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் 7ம் வரிசையில் ஃபினிஷராக ஆடுவார். ஸ்பின்னர்களாக அஷ்வின் மற்றும் சாஹல் ஆகிய இருவரையும் ஃபாஸ்ட் பவுலர்களாக டிரெண்ட் போல்ட் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய இருவரும் ஆடுவார்கள்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வலுவான ஆடும் லெவன்:

ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), தேவ்தத் படிக்கல், ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், ஜேசன் ஹோல்டர், ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா, டிரெண்ட் போல்ட்.

ரிஷப் பண்ட் மூளை & முதுகுத்தண்டு MRI ஸ்கேன் ரிப்போர்ட்..! எந்த பிரச்னையும் இல்லை.. ரசிகர்கள் நிம்மதி

கடந்த சீசனில் ஃபைனல் வரை சென்று ஃபைனலில் குஜராத் டைட்டன்ஸிடம் தோற்று கோப்பையை இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அடுத்த சீசனிலும் வலுவான அணியாகவே களமிறங்குகிறது.
 

click me!