RR vs CSK: ராஜஸ்தான் ராயல்ஸூக்கு முக்கியமான போட்டி..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published May 20, 2022, 2:32 PM IST
Highlights

ராஜஸ்தான் ராயல்ஸ் - சிஎஸ்கே இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இன்று நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் சிஎஸ்கேவும் மோதுகின்றன. சிஎஸ்கே அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து தொடரை விட்டு வெளியேறிவிட்டது. அதனால் அந்த அணிக்கு இந்த போட்டியில் இழப்பதற்கு எதுவும் இல்லை.

இந்த சீசனில் சிறப்பாக ஆடிவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 16 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் 3ம் இடத்தில் இருக்கிறது. சிஎஸ்கேவிற்கு எதிராக ஜெயித்தால் 18 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2ம் இடத்திற்கு முன்னேறிவிடும். இந்த போட்டியில் தோற்றாலும் அந்த அணிக்கு நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் பிளே ஆஃப் வாய்ப்புள்ளது. ஆனால் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்று 2ம் இடத்திற்கு முன்னேறவே நினைக்கும்.

மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், ரவி அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், டிரெண்ட் போல்ட், ஒபெட் மெக்காய், பிரசித் கிருஷ்ணா.

உத்தேச சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, ராபின் உத்தப்பா, மொயின் அலி, ஷிவம் துபே, அம்பாதி ராயுடு, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), மிட்செல் சாண்ட்னெர், பிரசாந்த் சோலங்கி, மதீஷா பதிரனா, முகேஷ் சௌத்ரி.
 

click me!