நான் ரிதிமான் சஹாவிடம் ரொம்ப நேர்மையா நடந்துகிட்டேன்.. எல்லா வீரர்களிடமுமே அப்படித்தான்! மௌனம் கலைத்த டிராவிட்

Published : Feb 21, 2022, 03:55 PM IST
நான் ரிதிமான் சஹாவிடம் ரொம்ப நேர்மையா நடந்துகிட்டேன்.. எல்லா வீரர்களிடமுமே அப்படித்தான்! மௌனம் கலைத்த டிராவிட்

சுருக்கம்

தான் டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டதை தன்னிடம் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதை வெளிப்படையாக தெரிவித்து சஹா சர்ச்சையை கிளப்பிய நிலையில், அதுகுறித்து ராகுல் டிராவிட் மௌனம் கலைத்துள்ளார்.  

இலங்கைக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுவிட்டது. ரோஹித் சர்மா டெஸ்ட் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியில் ரஹானே, புஜாரா, இஷாந்த் சர்மா, ரிதிமான் சஹா ஆகிய சீனியர் வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

ரஹானே, புஜாரா கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சரியாக ஆடாததன் விளைவாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இஷாந்த் சர்மா, ரிதிமான் சஹா ஆகிய இருவருக்கும் இந்திய அணியில் இடம் இல்லை. ரிஷப் பண்ட் முதன்மை விக்கெட் கீப்பராக ஆடுகிறார். அவருக்கு மாற்றாக மற்றொரு இளம் விக்கெட் கீப்பர் வளர்த்தெடுக்கப்படுகிறார். அணியின் நலனையும் எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் 37 வயது சஹாவை அணியில் எடுத்து பென்ச்சில் உட்காரவைப்பதில் பிரயோஜனம் இல்லை.

அந்தவகையில் ரிதிமான் சஹா இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளார். தான் ஓரங்கட்டப்பட்டதை தன்னிடம் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்தது குறித்து பேசியிருந்த ரிதிமான் சஹா, நான்(டிராவிட்) உன்னிடம் இதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை ரிதி.. இளம் விக்கெட் கீப்பரை வளர்த்தெடுக்க வேண்டும் என்று தேர்வாளர்களும் அணி நிர்வாகமும் இணைந்து முடிவு செய்திருக்கிறோம். நீங்கள்(சஹா) எங்களது முதல் சாய்ஸ் விக்கெட் கீப்பர் இல்லை. எனவே இளம் விக்கெட் கீப்பரை வளர்த்தெடுக்க இதுவே சரியான தருணம் என்று என்னிடம் (சஹா) கூறினார் ராகுல் டிராவிட். நான், சரி.. ஒன்றும் பிரச்னையில்லை என்றேன்.

இலங்கைக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் நீங்கள்(சஹா) இடம்பெறவில்லை என்றால் அதிர்ச்சியடைந்து விடாதீர்கள். நீங்கள் வேறு ஏதேனும் முடிவு எடுக்கவேண்டும் என்றால் எடுக்கலாம் என்று டிராவிட் கூறினார். ஆனால், நான் ஓய்வுபெறும் ஐடியா எல்லாம் இல்லை என்று தெளிவாக கூறிவிட்டேன். கிரிக்கெட் ஆட எனக்கு பிடிக்கும் என்பதால் தான் நான் கிரிக்கெட் ஆடுகிறேன். எனவே நான் தொடர்ந்து ஆடுவேன். நீங்கள்(இந்திய அணி நிர்வாகம்) என்னை இந்திய அணியில் தேர்வு செய்யவில்லை என்றால் அது உங்களது முடிவு என்று கூறிவிட்டதாக சஹா தெரிவித்திருந்தார்.
 
வெஸ்ட் இண்டீஸை டி20 தொடரில் இந்திய அணி 3-0 என ஒயிட்வாஷ் செய்தபின்னர், ராகுல் டிராவிட்டின் செய்தியாளர்கள் சந்திப்பில், ரிதிமான் சஹாவின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்து பேசிய ராகுல் டிராவிட், ரிதிமான் சஹா மீதும் அவர் இந்திய அணிக்கு அளித்த பங்களிப்பு மீதும் எனக்கு மிகுந்த மதிப்பு இருக்கிறது. அந்த மதிப்பு தான், சஹாவுடனான எனது உரையாடலுக்கே காரணம். அவர் டெஸ்ட் அணியில் இடம்பெறாததை மீடியா மூலம் தெரிந்துகொள்ளாமல், அவர் ஏன் அணியில் இடம்பெறவில்லை என்பதற்கான நேர்மையான காரணத்தையும், அதுகுறித்த தெளிவையும் நேரடியாக என் மூலம் பெற வேண்டும் என்று விரும்பியதால் தான் அந்த உரையாடலே நடந்தது. 

இதுமாதிரியான உரையாடல்கள் ஒவ்வொரு வீரருடனும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. நானும் ரோஹித்தும், ஆடும் லெவனில் இடம்பெறாத ஒவ்வொரு வீரரிடமும் அவர்கள் ஏன் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை, மற்றவர்கள் இடம்பிடித்ததற்கான காரணம் என்னவென்பதை தெளிவாக எடுத்துரைத்து வருகிறோம். நமது எல்லா கருத்துகளுடனும் மற்றவர்கள் உடன்பட வேண்டும் என்பதில்லை. எனவே ரிதிமான் சஹாவின் பேச்சால் நான் காயப்படவில்லை. 

இந்த ஆண்டில் மொத்தமாகவே 3 டெஸ்ட் போட்டிகளில் தான் ஆடவிருக்கிறோம். ரிஷப் பண்ட் முதன்மை விக்கெட் கீப்பராக திகழ்கிறார். மாற்று விக்கெட் கீப்பராக இளம் வீரர் ஒருவரை வளர்க்க வேண்டும். இது ஒன்றுதான் காரணமே தவிர, ரிதிமான் சஹா மீதும் அவரது பங்களிப்பு மீதும் எனக்கு மிகுந்த மதிப்பு இருக்கிறது என்று ராகுல் டிராவிட் தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!