Quinton de Kock: என் குடும்பம் தான் எனக்கு முக்கியம்.. 29 வயதிலேயே திடீரென ஓய்வு அறிவித்த குயிண்டன் டி காக்

Published : Dec 31, 2021, 11:43 AM IST
Quinton de Kock: என் குடும்பம் தான் எனக்கு முக்கியம்.. 29 வயதிலேயே திடீரென ஓய்வு அறிவித்த குயிண்டன் டி காக்

சுருக்கம்

தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பரும் நட்சத்திர பேட்ஸ்மேனுமான குயிண்டன் டி காக் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு அறிவித்துள்ளார்.  

இந்தியாவிற்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்கா அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. செஞ்சூரியனில் நடந்த இந்த போட்டி நேற்று (டிசம்பர் 30) முடிவடைந்த நிலையில், இந்த போட்டி முடிந்த அடுத்த சில மணி நேரங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார் குயிண்டன் டி காக்.

டி காக்கிற்கு குழந்தை பிறக்கவுள்ளதால், இந்தியாவிற்கு எதிரான 2 மற்றும் 3வது டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலக்கு கேட்டிருந்தார் குயிண்டன் டி காக். இந்நிலையில், திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விலகுவதாக முடிவெடுத்து, ஓய்வு அறிவித்துள்ளார்.

29 வயதான டி காக் தென்னாப்பிரிக்க அணிக்காக 54 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3300 ரன்களை குவித்துள்ளார். ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் டி காக் தொடர்ந்து ஆடுவார்.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் முடிவை திடீரென எடுக்கவில்லை என்று கூறியுள்ள டி காக், தனக்கு குழந்தை பிறக்கவுள்ளதால் குழந்தையை வளர்ப்பது, குடும்பத்தை பராமரிப்பது ஆகிய முக்கியமான பணிகள் இருப்பதால் குடும்பமே தனக்கு முக்கியம் என்பதால் தான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs SA 1st T20: கம்பேக் மேட்ச்சில் காட்டடி அடித்த ஹர்திக் பாண்ட்யா.. SA-க்கு சவாலான இலக்கு!
IND vs SA 1st T20: இந்தியா பேட்டிங்..! சஞ்சு சாம்சன், நம்பர் 1 ஸ்பின்னர் நீக்கம்! பிளேயிங் லெவன்!