
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் டைட்டிலை நியூசிலாந்து அணி வென்றது. 2019 - 2021ல் நடத்தப்பட்ட முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நியூசிலாந்து வென்றது. 2021 - 2023 வரையிலான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான தொடர்கள் நடந்துவருகின்றன.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளி பட்டியலில், ஆஷஸ் தொடரில் சிறப்பாக ஆடி தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான பாரம்பரியமான ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு முன்பாக இலங்கை அணி 100 சதவிகித வெற்றியுடன் முதலிடத்தில் இருந்தது.
5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 3 போட்டிகள் நடந்துள்ள நிலையில், மூன்றிலுமே வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 100 சதவிகித வெற்றியுடன் முதலிடத்தில் உள்ளது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி இப்போது ஆடுவதை பார்க்கையில், ஆஸ்திரேலிய அணி எஞ்சிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்வதற்கான வாய்ப்பு அதிகம். எனவே ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் நீடிப்பது உறுதி.
2ம் இடத்தில் இலங்கை அணி உள்ளது. 75 சதவிகித வெற்றியுடன் பாகிஸ்தான் அணி 3ம் இடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற்ற இந்திய அணி, 64.28 சதவிகித வெற்றியுடன் 4ம் இடத்தில் உள்ளது.