கிறிஸ் கெய்லின் அதிரடி அரைசதத்தால் லாகூர் காலண்டர்ஸுக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த குவெட்டா கிளேடியேட்டர்ஸ்

Published : Feb 22, 2021, 09:52 PM IST
கிறிஸ் கெய்லின் அதிரடி அரைசதத்தால் லாகூர் காலண்டர்ஸுக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த குவெட்டா கிளேடியேட்டர்ஸ்

சுருக்கம்

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கிறிஸ் கெய்லின் அதிரடி அரைசதத்தால் லாகூர் காலண்டர்ஸுக்கு 179 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது குவெட்டா கிளேடியேட்டர்ஸ்.  

பாகிஸ்தானில் நடத்தப்படும் டி20 லீக் தொடரான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் நேற்று தொடங்கியது. இன்று லாகூர் காலண்டர்ஸ் மற்றும் குவெட்டா கிளேடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி கராச்சியில் இன்று நடக்கிறது.

டாஸ் வென்ற லாகூர் அணி, குவெட்டா அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. காலண்டர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் டாம் பாண்ட்டன் மற்றும் சைம் அயூப் ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, 3ம் வரிசையில் இறங்கிய அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார்.

முதல் 2 விக்கெட்டுகள் விரைவில் விழுந்தபோதிலும், கெய்ல் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து குவெட்டா அணியை கரைசேர்த்தார். 40 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 68 ரன்கள் அடித்தார் கெய்ல். கெய்லுடன் இணைந்து அந்த அணியின் கேப்டன் சர்ஃபராஸ் அகமது 40 ரன்கள் அடித்தார். முகமது நவாஸ் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி 20 பந்தில் 33 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 178 ரன்கள் அடித்த குவெட்டா கிளேடியட்டர்ஸ் அணி, 179 ரன்கள் என்ற சவாலான இலக்கை லாகூர் அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

சஞ்சு சாம்சன் ஆவேசம்.. வலியால் துடித்து அலறிய அம்பயர்.. பதறிய‌ கம்பீர்.. என்ன நடந்தது?
இங்கிலாந்தை கதறவிட்ட ஹெட் 'மாஸ்டர்'.. அட்டகாசமான சதம்.. வலுவான நிலையில் ஆஸ்திரேலியா!