#DCvsPBKS இனியும் உன்னை நம்புனா வேலைக்கு ஆகாது; கிளம்பு..! பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிரடி மாற்றம்

Published : Apr 18, 2021, 05:57 PM IST
#DCvsPBKS இனியும் உன்னை நம்புனா வேலைக்கு ஆகாது; கிளம்பு..! பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிரடி மாற்றம்

சுருக்கம்

டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் உத்தேச பஞ்சாப் கிங்ஸ் அணியை பார்ப்போம்.  

டெல்லி கேபிடள்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. மும்பை வான்கடேவில் நடக்கும் இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஒரேயொரு மாற்றத்துடன் களமிறங்கும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி, சிஎஸ்கே அணிக்கு எதிராக வெறும் 106 ரன்கள் மட்டுமே அடித்து தோற்றது. எனவே டெல்லிக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் கம்பேக் கொடுக்கும் முனைப்பில் உள்ளது.

இந்த போட்டியில் ஆஸி., ஃபாஸ்ட் பவுலரான ரிலே மெரிடித்தை நீக்கிவிட்டு, கிறிஸ் ஜோர்டானை சேர்க்க வாய்ப்புள்ளது. ரிலே மெரிடித் எதிர்பார்த்த அளவிற்கு முதலிரண்டு போட்டிகளில் பந்துவீசவில்லை. விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் திணறியது மட்டுமல்லாது, ரன்களையும் வாரி வழங்கினார். எனவே அவர் நீக்கப்பட்டு, பேட்டிங்கும் ஆடத்தெரிந்த மிதவேகப்பந்துவீச்சாளரான கிறிஸ் ஜோர்டான் சேர்க்கப்படலாம். அந்த ஒரு மாற்றத்தைத்தவிர வேறு மாற்றம் எதுவும் செய்யப்பட வாய்ப்பில்லை.

உத்தேச பஞ்சாப் கிங்ஸ் அணி:

கேஎல் ராகுல்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மயன்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், தீபக் ஹூடா, நிகோலஸ் பூரன், ஷாருக்கான், ஜெய் ரிச்சர்ட்ஸன், கிறிஸ் ஜோர்டான், முருகன் அஷ்வின், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.
 

PREV
click me!

Recommended Stories

டி20 உலகக்கோப்பை டிக்கெட் வெறும் 100 ரூபாய் தான்! எப்படி புக் செய்வது? முழு விவரம் இதோ!
IND vs SA 2nd T20: குயின்டன் டி காக் சிக்சர் மழை.. அர்ஷ்தீப், பும்ரா மோசமான பவுலிங்.. இந்தியாவுக்கு இமாலய இலக்கு!