IPL 2021 டீம் செமயா செட் ஆகிடுச்சு.. உற்சாகத்துடன் ஆர்சிபியை எதிர்கொள்ளும் பஞ்சாப் அணி..! உத்தேச ஆடும் லெவன்

Published : Oct 02, 2021, 10:55 PM IST
IPL 2021 டீம் செமயா செட் ஆகிடுச்சு.. உற்சாகத்துடன் ஆர்சிபியை எதிர்கொள்ளும் பஞ்சாப் அணி..! உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

ஐபிஎல் 14வது சீசனில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், புள்ளி பட்டியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கியமான போட்டியில் ஆர்சிபியும் பஞ்சாப் கிங்ஸும் மோதுகின்றன.  இந்த போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றால் ஆர்சிபி பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடும். பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் 4ம் இடத்திற்கு முன்னேறும். பிளே ஆஃப் வாய்ப்பையும் தக்கவைக்கும்.

இந்த போட்டிக்கான பஞ்சாப் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கடந்த போட்டியில் தான் ஆடும் லெவன் காம்பினேஷன் வலுவானதாகவும், நல்ல பேலன்ஸானதாகவும் செட் ஆகியுள்ளது.  எனவே அந்த அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வேண்டிய அவசியமில்லை. அதனால் கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும்.

உத்தேச பஞ்சாப் கிங்ஸ் அணி;

கேஎல் ராகுல்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மயன்க் அகர்வால், மார்க்ரம், பூரன், ஷருக்கான், தீபக் ஹூடா, ஃபேபியன் ஆலன், நேதன் எல்லிஸ், ஷமி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்.

ஆர்சிபி அணியில் டேனியல் கிறிஸ்டியனுக்கு பதிலாக கைல் ஜாமிசன் சேர்க்கப்படலாம். 

உத்தேச ஆர்சிபி அணி:

விராட் கோலி(கேப்டன்), தேவ்தத் படிக்கல், ஸ்ரீகர் பரத்(விக்கெட் கீப்பர்), க்ளென் மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், ஜார்ஜ் கார்டன், கைல் ஜாமிசன், ஷபாஸ் அகமது, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.
 

PREV
click me!

Recommended Stories

Hardik Pandya Trade: அங்கேயும் வேணாம், இங்கேயும் வேணாம்? ஹர்திக் பாண்டியாவை கைவிடும் மும்பை? CSK, MI விளக்கம்
Vaibhav Suryavanshi: வைபவ் சூர்யவன்ஷி பேன்ட்டை கழட்டி கையில் கொடுத்திருப்பான்.. அப்படி என்றால் என்ன? ரவி சாஸ்திரி சொன்ன தகவல்