#PBKSvsKKR 2 அணிகளிலும் தலா ஒரு மாற்றம்..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Apr 26, 2021, 3:01 PM IST
Highlights

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கேகேஆர் அணிகள் மோதும் இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 14வது சீசன் கேகேஆர் அணிக்கு படுமோசமான தொடக்கமாக அமைந்துள்ளது. இதுவரை ஆடிய 5 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது கேகேஆர் அணி. 5 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 5ம் இடத்தில் உள்ளது பஞ்சாப் கிங்ஸ்.

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கேகேஆர் அணிகள் மோதும் இன்றைய போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் இரு அணிகளிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

கேகேஆர் அணியில் ஃபாஸ்ட் பவுலர் பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சீனியர் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் சேர்க்கப்படலாம்.

உத்தேச கேகேஆர் அணி:

ஷுப்மன் கில், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, ஒயின் மோர்கன்(கேப்டன்), தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், ஆண்ட்ரே ரசல், பாட் கம்மின்ஸ், ஹர்பஜன் சிங், வருண் சக்கரவர்த்தி, ஷிவம் மாவி.

பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜலஜ் சக்ஸேனா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஆஸி., ஃபாஸ்ட் பவுலர்களான ஜெய் ரிச்சர்ட்ஸன்/ரிலே மெரிடித் ஆகிய இருவரில் ஒருவர் சேர்க்கப்படலாம். கடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 3 வெளிநாட்டு வீரர்களுடன் மட்டுமே களமிறங்கியது. 

உத்தேச பஞ்சாப் கிங்ஸ் அணி:

கேஎல் ராகுல்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மயன்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், பூரன், தீபக் ஹூடா, மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ், ஷாருக்கான், ஜெய் ரிச்சர்ட்ஸன்/மெரிடித், ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய்.
 

click me!