#IPL2021 நானும் சிக்ஸர்லாம் அடிப்பேன்டா.. நெட்டில் சிக்ஸர் மழை பொழிந்த புஜாரா.. வீடியோ

By karthikeyan VFirst Published Mar 31, 2021, 3:31 PM IST
Highlights

டெஸ்ட் வீரர் என்று முத்திரை குத்தப்பட்ட புஜாரா, இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக ஆடவுள்ள நிலையில், வலைப்பயிற்சியில் பெரிய ஷாட்டுகளை ஆடி தெறிக்கவிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

டெஸ்ட் வீரர் என்று முத்திரை குத்தப்பட்ட புஜாராவை, ஐபிஎல் அணிகள் தொடர்ந்து புறக்கணித்துவந்தன. இரண்டே மாதத்தில் கோடிகளில் சம்பாதிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் ஐபிஎல்லில், புஜாரா, ஹனுமா விஹாரி போன்ற டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் வீரர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

ஐபிஎல்லில் நன்றாக ஆடும் வீரர்களுக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் வீரர்களால் அதிரடியாக ஆடமுடியாது என்று ஒரு கருத்தை வலுக்கட்டாயமாக ஏற்படுத்திக்கொண்டு புஜாரா, ஹனுமா விஹாரி ஆகிய வீரர்களை ஐபிஎல் அணிகள் ஒதுக்கிவருகின்றன.

இந்நிலையில், புஜாராவை ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலத்தில் அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு சிஎஸ்கே அணி எடுத்தது. சிஎஸ்கே அணி புஜாராவை ஏலத்தில் எடுத்ததுமே, ஏலத்தில் கலந்துகொண்ட மற்ற அணிகள் கைதட்டி சிஎஸ்கே அணியின் முடிவை வரவேற்றனர்.

புஜாராவை சிஎஸ்கே அணி எடுத்தாலும், அவரை ஆடும் லெவனில் எடுக்க வாய்ப்பில்லை. புஜாராவை கடமைக்குத்தான் அணியில் எடுத்ததாக சிலர் கருத்து தெரிவித்தனர். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக சூழல் மாறுகிறது. பயிற்சியில் புஜாரா பட்டைய கிளப்பிவருகிறார்.

வலைப்பயிற்சியில் புஜாரா பெரிய ஷாட்டுகளை ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. தீபக் சாஹரின் பந்தை டீப் மிட் விக்கெட் திசையில் தூக்கியடிக்கும் புஜாரா, கரண் சர்மாவின் பந்தை ஸ்வீப் ஷாட், பின்னர் இறங்கி வந்து ஒரு ஷாட், லாங் ஆன், லாங் ஆஃபில் சிக்ஸர்கள் என தெறிக்கவிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகிவருகிறது. 
 

Puji was on fire 🔥 pic.twitter.com/CNbPXi786q

— Ravi Desai 🇮🇳 Champion CSK 💛🏆 (@its_DRP)
click me!