கடைசி டி20 போட்டிக்கான அணியில் 2 அதிரடி மாற்றங்கள்.. உத்தேச இந்திய அணி

By karthikeyan VFirst Published Dec 10, 2019, 11:16 AM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நாளை மும்பை வான்கடேவில் நடக்கவுள்ள கடைசி டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணியை பார்ப்போம். 

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. 

முதலில் டி20 தொடர் நடந்துவரும் நிலையில், முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. எனவே 1-1 என தொடர் சமனடைந்துள்ளது. கடைசி போட்டியில் வெல்லும் அணி தொடரை வெல்லும். 

தொடரை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நாளை நடக்கிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியின் ஃபீல்டிங் மோசமாக இருந்தது. குறிப்பாக இரண்டாவது போட்டியில் மோசமான ஃபீல்டிங் தான் இந்திய அணியின் தோல்விக்கே காரணம். 

வழக்கம்போலவே விக்கெட் கீப்பிங்கில் ரிஷப் பண்ட் சொதப்பினார். போட்டிக்கு போட்டி மேம்பட வேண்டிய அவரது விக்கெட் கீப்பிங், அதற்கு நேர்மாறாக மோசமடைந்துவருகிறது. பந்தை கைகளில் பிடிப்பதே இல்லை. அதே பழக்கம் கேட்ச் பிடிக்கும்போதும் வருவதால், கேட்ச்சை மிஸ் செய்துவிடுகிறார். அவருக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்ட நிலையில், அவர் பேட்டிங் மற்றும் கீப்பிங் என இரண்டிலுமே சொதப்புவதால், சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி நிர்வாகம் உள்ளது. 

எனவே கடைசி டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. ரிஷப் பண்ட் நீக்கப்பட்டு சஞ்சு சாம்சன் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதேபோல தீபக் சாஹருக்கு பதிலாக, ஷமி ஆடுவதற்கான வாய்ப்புள்ளது. 

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், ஷிவம் துபே, ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், ஷமி, சாஹல். 
 

click me!