கடைசி பந்தில் சிக்ஸர் அடித்த சல்மான் பட்.. டி10 போட்டியில் ஹண்டர்ஸ் அணி த்ரில் வெற்றி.. வீடியோ

Published : Dec 09, 2019, 05:16 PM IST
கடைசி பந்தில் சிக்ஸர் அடித்த சல்மான் பட்.. டி10 போட்டியில் ஹண்டர்ஸ் அணி த்ரில் வெற்றி.. வீடியோ

சுருக்கம்

கத்தார் டி10 லீக் தொடரில் கடைசி பந்தில் சல்மான் பட் சிக்ஸர் அடித்து ஹண்டர்ஸ் அணியை த்ரில் வெற்றி பெற செய்தார்.   

அபுதாபி டி10 லீக் தொடர் அண்மையில் நடந்து முடிந்த நிலையில், கத்தார் டி10 லீக் தொடர் நடந்துவருகிறது. இதில் நேற்று ஹீட் ஸ்டோர்மர்ஸ் மற்றும் ஃபல்கான் ஹண்டர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய ஹீட் ஸ்டோர்மர்ஸ் அணி 10 ஓவரில் 103 ரன்களை குவித்தது. 

104 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய ஹண்டர்ஸ் அணியின் தொடக்க வீரர் சல்மான் பட், கடைசிவரை களத்தில் நின்று அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். மற்றொரு தொடக்க வீரரான ஹாசிம் ஆம்லா 17 ரன்களிலும் காம்ரான் கான் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய மறுமுனையில் சல்மான் பட் நிலைத்து ஆடினார். முகமது ரிஸ்லான் அதிரடியாக ஆடி 11 பந்தில் 24 ரன்கள் அடித்தார். 

கடைசி ஓவரில் ஹண்டர்ஸ் அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரின் முதல் பந்தில் பட் சிங்கிள் எடுக்க, இரண்டாவது பந்தில் ரிஸ்லான் பவுண்டரி அடித்துவிட்டு, அடுத்த பந்தில் ரன் அடிக்காமல், நான்காவது பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கடைசி இரண்டு பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்டது. ஐந்தாவது பந்தில் டமூர் சஜ்ஜத் சிங்கிள் எடுக்க, கடைசி பந்தில் சிக்ஸர் தேவைப்பட்டது. களத்தில் இருந்த சல்மான் பட், எக்ஸ்ட்ரா கவர் திசையில் சிக்ஸர் அடித்து ஹண்டர்ஸ் அணியை த்ரில் வெற்றி பெற செய்தார். இதையடுத்து ஹண்டர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

சல்மான் பட் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்த வீடியோ இதோ.. 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!