கடைசி ஒருநாள் போட்டிக்கான அணியில் ஒரேயொரு கட்டாய மாற்றம்.. உத்தேச இந்திய அணி

Published : Dec 21, 2019, 04:07 PM IST
கடைசி ஒருநாள் போட்டிக்கான அணியில் ஒரேயொரு கட்டாய மாற்றம்.. உத்தேச இந்திய அணி

சுருக்கம்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில், தொடர் 1-1 என சமனடைந்துள்ளது.   

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. இதையடுத்து தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 

தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி கட்டாக்கில் நாளை நடக்கிறது. அந்த போட்டியில், தீபக் சாஹரை தவிர, இரண்டாவது போட்டியில் ஆடிய அதே அணிதான் களமிறங்கும். இரண்டாவது போட்டியில் ஆடும்போது தீபக் சாஹருக்கு முதுகுப்பகுதியில் வலி ஏற்பட்டதால் அவர் கடைசி போட்டியிலிருந்து விலகியுள்ளார். 

எனவே தீபக் சாஹருக்கு பதிலாக அணியில் இணைந்த இளம் ஃபாஸ்ட் பவுலர் நவ்தீப் சைனி கடைசி போட்டியில் ஆடுவார். அதைத்தவிர வேறு எந்த மாற்றமும் அணியில் செய்யப்பட வாய்ப்பில்லை.

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, ஷமி. 
 

PREV
click me!

Recommended Stories

Galle Test: மளமளவென விக்கெட்டை பறிகொடுக்கும் இலங்கை வீரர்கள்.. வெற்றி முகத்தில் இந்தியா..
Virat Kohli: 18 ஆண்டு கால ஆதிக்கம்: கோலியின் சகாப்தத்தை சொல்லும் 10 வரலாற்று சாதனைகள்