கடைசி போட்டிக்கான அணியில் அதிரடி மாற்றங்கள்.. உத்தேச இங்கிலாந்து லெவன்

By karthikeyan VFirst Published Aug 3, 2020, 5:42 PM IST
Highlights

அயர்லாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டிக்கான உத்தேச இங்கிலாந்து அணியை பார்ப்போம். 
 

அயர்லாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடவிருப்பதால், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஆர்ச்சர் உள்ளிட்ட அணியின் நட்சத்திர வீரர்கள் யாரும் ஆடவில்லை. 

அதனால் டேவிட் வில்லி, ஜேம்ஸ் வின்ஸ், டாவ்சன், டாப்ளி உள்ளிட்ட அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த கம்பேக் வாய்ப்பை டேவிட் வில்லி நன்றாக பயன்படுத்தி கொண்டார். ஆனால் ஜேம்ஸ் வின்ஸ், டாப்ளி ஆகியோர் பயன்படுத்தி கொள்ள தவறிவிட்டனர். 

அயர்லாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஆட வாய்ப்பு கிடைத்த டாப்ளி, ஒரேயொரு விக்கெட்டை, அதுவும் இன்னிங்ஸின் கடைசி பந்தில் வீழ்த்தினார். ஆனால் வில்லி, முதல் போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார். இரண்டாவது போட்டியில் பேட்டிங்கில் அசத்தினார். எனவே அவருக்கு தொடர்ந்து அணியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. 

அயர்லாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே வென்றுவிட்ட இங்கிலாந்து அணி கடைசி போட்டியில், முதல் 2 போட்டிகளில் ஆடாத சில வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அந்தவகையில், முதல் 2 போட்டிகளிலும் ஆடிராத பவுலிங் ஆல்ரவுண்டர் டாவ்சனுக்கு கடைசி போட்டியில் ஆட வாய்ப்பு கொடுக்கப்படலாம். 2வது ஒருநாள் போட்டியில் ஆடிய ஃபாஸ்ட் பவுலர் டாப்ளி சொதப்பியதால் அவர் நீக்கப்பட்டு, டாம் கரனுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படலாம். அதேபோல முதல் 2 போட்டிகளிலும் ஆடாத பேட்ஸ்மேன் ஜோ டென்லிக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஜேசன் ராய் அல்லது ஜேம்ஸ் வின்ஸ் ஆகிய இருவரில் ஒருவர் நீக்கப்படலாம். 

உத்தேச இங்கிலாந்து அணி:

ஜானி பேர்ஸ்டோ, ஜோ டென்லி, ஜேசன் ராய்/ஜேம்ஸ் வின்ஸ், டாம் பாண்ட்டன், இயன் மோர்கன்(கேப்டன்), சாம் பில்லிங்ஸ், டேவிட் வில்லி, மொயின் அலி, டாவ்சன், அடில் ரஷீத், டாம் கரன்.
 

click me!