ஃபைனலில் சிஎஸ்கே அணியில் ஒரேயொரு அதிரடி மாற்றம்.. உத்தேச அணி

By karthikeyan VFirst Published May 12, 2019, 6:36 PM IST
Highlights

இந்த சீசனில் இதுவரை இரு அணிகளும் மோதிய 3 போட்டிகளிலுமே மும்பை இந்தியன்ஸ் அணி தான் வென்றது. இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி என்றாலே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அதிலும் இந்த இரண்டு அணிகளும் ஏற்கனவே மூன்றுமுறை இறுதி போட்டியில் மோதிய அணிகள் என்பதால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு எகிறியுள்ளது. 
 

ஐபிஎல் 12வது சீசனின் இறுதிப்போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஐபிஎல்லில் தலா 3 முறை கோப்பையை வென்று சமபலம் வாய்ந்த வெற்றிகரமான அணிகளாக திகழும் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் நான்காவது முறையாக கோப்பையை வெல்ல இன்று பலப்பரீட்சை செய்கின்றன.

இந்த சீசனில் இதுவரை இரு அணிகளும் மோதிய 3 போட்டிகளிலுமே மும்பை இந்தியன்ஸ் அணி தான் வென்றது. இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி என்றாலே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அதிலும் இந்த இரண்டு அணிகளும் ஏற்கனவே மூன்றுமுறை இறுதி போட்டியில் மோதிய அணிகள் என்பதால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு எகிறியுள்ளது. 

இந்த போட்டியில் வென்று நான்காவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் இரு அணிகளுமே உள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணி சமபலம் வாய்ந்த அணியாக உள்ளது. ஆனால் சிஎஸ்கே அணி, பேட்டிங்கை விட அதிகமாக பவுலிங்கை சார்ந்துள்ளது. இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங், ஜடேஜா ஆகிய 3 ஸ்பின்னர்களைத்தான் அதிகமாக சார்ந்திருக்கிறது.

சிஎஸ்கே அணி பேட்டிங் ஆர்டரை வலுப்படுத்தத்தான் முனையும். கடந்த போட்டியில் முரளி விஜயை நீக்கிவிட்டு ஷர்துல் தாகூரை சேர்த்துப்பார்த்தார் தோனி. ஆனால் ஷர்துல் ஒரேயொரு ஓவரை மட்டும் வீசி அதிக ரன்களை விட்டுக்கொடுத்தார். அதன்பின்னர் அவருக்கு ஓவரே கொடுக்கப்படவில்லை. அவரை அணியில் சேர்த்ததற்கு பயனே இல்லை. அதேநேரத்தில் டெல்லிக்கு எதிரான இரண்டாம் தகுதிச்சுற்று போட்டியில் பிராவோ நன்றாக பந்துவீசினார். எனவே பிராவோவை இன்றைய போட்டியில் பவுலிங் ஆப்சனாக பயன்படுத்தக்கூடும். 

அதனால் ஷர்துல் தாகூரை நீக்கிவிட்டு முரளி விஜய் அணியில் சேர்க்கப்படலாம். இந்த ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட வாய்ப்புள்ளது. ஆனால் தொடக்க வீரராக முரளி விஜய் களமிறக்கப்பட வாய்ப்பில்லை. வாட்சனும் டுபிளெசிஸுமே தொடக்க வீரர்களாக களமிறங்குவர்.

உத்தேச சிஎஸ்கே அணி:

ஷேன் வாட்சன், டுபிளெசிஸ், முரளி விஜய், ரெய்னா, ராயுடு, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஜடேஜா, பிராவோ, ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், தீபக் சாஹர்.
 

click me!