சிஎஸ்கே பவுலர்களுக்கு இவங்க 2 பேரும்தான் பெரிய பிரச்னை.. லெஜண்ட் விவியன் ரிச்சர்ட்ஸ் அதிரடி

Published : May 12, 2019, 03:25 PM ISTUpdated : May 12, 2019, 03:29 PM IST
சிஎஸ்கே பவுலர்களுக்கு இவங்க 2 பேரும்தான் பெரிய பிரச்னை.. லெஜண்ட் விவியன் ரிச்சர்ட்ஸ் அதிரடி

சுருக்கம்

ஐபிஎல்லில் தலா 3 முறை கோப்பையை வென்று சமபலம் வாய்ந்த வெற்றிகரமான அணிகளாக திகழும் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் நான்காவது முறையாக கோப்பையை வெல்ல இன்று பலப்பரீட்சை செய்கின்றன.  

ஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இன்று நடக்கும் இறுதி போட்டியில் நான்காவது முறையாக மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் மோதுகின்றன.

ஐபிஎல்லில் தலா 3 முறை கோப்பையை வென்று சமபலம் வாய்ந்த வெற்றிகரமான அணிகளாக திகழும் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் நான்காவது முறையாக கோப்பையை வெல்ல இன்று பலப்பரீட்சை செய்கின்றன.

இந்த சீசனில் இதுவரை இரு அணிகளும் மோதிய 3 போட்டிகளிலுமே மும்பை இந்தியன்ஸ் அணி தான் வென்றது. இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி என்றாலே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அதிலும் இந்த இரண்டு அணிகளும் ஏற்கனவே மூன்றுமுறை இறுதி போட்டியில் மோதிய அணிகள் என்பதால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு எகிறியுள்ளது. 

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ், பொல்லார்டு அவரது பவர் ஷோவை காட்ட வேண்டும். பொல்லார்டு அடித்து ஆடினால் ஹர்திக் பாண்டியா மேலும் சிறப்பாக ஆடுவார். இவர்கள் இருவரும்தான் சிஎஸ்கே பவுலர்களுக்கு பெரும் பிரச்னையாக இருப்பார்கள். இரு அணிகளிலுமே நிறைய மேட்ச் வின்னர்கள் உள்ளனர். இரு அணி வீரர்களும் அவரவர் ரோல் தெரிந்து சிறப்பாக செயல்படுகின்றனர். இந்த போட்டி ஒரு சிறந்த விறுவிறுப்பான போட்டியாக அமையும் என்று ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!