ஒரு தடவை தான்டா மிஸ் ஆகும்.. ஒவ்வொரு தடவையும் இல்ல.. பிரித்வி ஷா அதிரடி பேட்டிங்

By karthikeyan VFirst Published Feb 15, 2020, 12:09 PM IST
Highlights

நியூசிலாந்து லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியின் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டான பிரித்வி ஷா, இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக தொடங்கியுள்ளார். 
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி வரும் 21ம் தேதி தொடங்குகிறது. ரோஹித் சர்மா இல்லாததால், பிரித்வி ஷா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரில் யார், மயன்க் அகர்வாலுடன் தொடக்க வீரராக இறங்குவார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. 

இந்நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து லெவன் அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டியில் பிரித்வி ஷா மற்றும் கில் ஆகிய இருவருமே டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். மயன்க் அகர்வாலும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். டாப் ஆர்டர்கள் மூவருமே படுமோசமாக அவுட்டானது, இந்திய அணிக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் அளிக்கும் சம்பவமாக அமைந்தது. 

ஆனால் முதல் இன்னிங்ஸில் ஹனுமா விஹாரியும் புஜாராவும் நன்றாக ஆடியதால், இந்திய அணி 263 ரன்களை அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து லெவன் அணியை இந்திய அணி 235 ரன்களுக்கே சுருட்டியது. 

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரராக மறுபடியும் மயன்க் அகர்வாலுடன் பிரித்வி ஷாவே இறங்கினார். இந்த முறை சொதப்பவில்லை. சிறப்பாக  ஆடினார். களத்திற்கு வந்தது முதலே அடித்து ஆடி, தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் பிரித்வி ஷா. 

Also Read - இங்கிலாந்துக்கு எதிராக கண்மூடித்தனமா அடித்த டி காக்.. டிவில்லியர்ஸின் சாதனையை தகர்த்து தரமான சம்பவம்

3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய ஆட்ட முடிவில், இரண்டாவது இன்னிங்ஸில் ப்ரித்வி ஷா 25 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 35 ரன்கள் அடித்து களத்தில் உள்ளார். மயன்க் அகர்வாலுமே அடித்து ஆடினார். அவர் 17 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 23 ரன்களுடன் களத்தில் உள்ளார். 

Also Read - வெறும் பத்தே பந்தில் ஆட்டத்தை தலைகீழாக திருப்பிய மொயின் அலி.. லைவ் மேட்ச்சை ஹைலைட்ஸ் மாதிரி வீடியோ

முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்த நிலையில், நல்ல ஃபார்மில் இருக்கும் பிரித்வி ஷா, இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக ஆடியதன் மூலம் அணி நிர்வாகத்திற்கு நம்பிக்கையளித்துள்ளார். 
 

click me!