வெறும் பத்தே பந்தில் ஆட்டத்தை தலைகீழாக திருப்பிய மொயின் அலி.. லைவ் மேட்ச்சை ஹைலைட்ஸ் மாதிரி மாற்றிய வீடியோ

By karthikeyan VFirst Published Feb 15, 2020, 10:42 AM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெறும் பத்தே பந்தில் ஆட்டத்தை தலைகீழாக திருப்பி ஆட்டநாயகன் விருதையும் வென்றார் மொயின் அலி. 
 

தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற நிலையில், நேற்று நடந்த இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 2 ரன் வித்தியாசத்தில் அதேமாதிரி த்ரில் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்காவை பழிதீர்த்ததோடு, 1-1 என தொடரை சமன் செய்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, மொயின் அலியின் காட்டடியால் 204 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய் 40 ரன்கள், பேர்ஸ்டோ 17 பந்தில் 30 ரன்கள் மற்றும் ஸ்டோக்ஸ் 30 பந்தில் 47 ரன்கள் என்ற நன்றாகத்தான் ஆடினார்கள். ஆனால் ஆட்டத்தையே தலைகீழாக புரட்டிப்போட்டு திருப்புமுனையாக அமைந்தது மொயின் அலியின் பேட்டிங்தான். வெறும் பத்தே பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 39 ரன்களை விளாசி அணியின் ஸ்கோரை படுவேகமாக உயர்த்திவிட்டு தனது பதினோறாவது பந்தில் ஆட்டமிழந்தார். அவரது அதிரடியால் இங்கிலாந்து அணி 204 ரன்களை குவித்தது. 

மொயின் அலி களத்திற்கு வரும்போது இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 15.1 ஓவரில் 125 ரன்கள் மட்டுமே. மொயின் அலி களத்தை விட்டு வெளியேறும்போது, இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 16வது ஓவரின் இரண்டாவது பந்தை இந்த இன்னிங்ஸில் தனது முதல் பந்தாக எதிர்கொண்ட மொயின் அலி அந்த பந்தில், ஒரு ரன் அடித்தார். அதன்பின்னர் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய மொயின் அலி பத்தே பந்தில் 39 ரன்கள் அடித்தார். 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் இதில் அடக்கம். மொயின் அலி எதிர்கொண்ட 11 பந்தில் அவர் அடித்த ரன்கள் - 1,6,1,1,6,4,6,6,4,4.

மொயின் அலி பேட்டிங் ஆடும்போது லைவ் மேட்ச்சே ஹைலைட்ஸ் மாதிரிதான் இருந்தது. அந்தளவிற்கு ஒவ்வொரு பந்தையுமே அடித்து ஆடினார். அவரது பேட்டிங் வீடியோ.. 

who needs a valentine when you have this video of moeen ali pic.twitter.com/1Tizfw5Up3

— paige (@paigecaunce)

205 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணிக்கு கேப்டனும் தொடக்க வீரருமான டி காக், அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். தொடக்கம் முதலே அடித்து ஆடிய டி காக், சிக்ஸர் மழை பொழிந்தார். வெறும் 17 பந்தில் அரைசதம் கடந்த டி காக், 22 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 65 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அவர் அவுட்டாகும்போது தென்னாப்பிரிக்க அணியின் ஸ்கோர் 8 ஓவரில் 92 ரன்கள். அவர் அமைத்து கொடுத்த அதிரடியான தொடக்கத்தால், மற்ற வீரர்கள் பெரியளவில் அடித்து ஆடவில்லையென்றாலும் கூட போட்டி கடைசி வரை சென்றது. 

ஆனால் வெற்றிக்கு அருகில் நெருங்கிய தென்னாப்பிரிக்காவின் இன்னிங்ஸில் கடைசி 2 பந்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்துக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார் டாம் கரன். அதனால் தென்னாப்பிரிக்க அணி தோல்வியடைந்தது. 

Also Read - இங்கிலாந்துக்கு எதிராக கண்மூடித்தனமா அடித்த டி காக்.. டிவில்லியர்ஸின் சாதனையை தகர்த்து தரமான சம்பவம்

இதையடுத்து தொடரை 1-1 என சமன் செய்தது இங்கிலாந்து அணி. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்த மொயின் அலிதான் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த போட்டியில் இங்கிலாந்து 200 ரன்களுக்கு மேல் கடந்ததால்தான் ஜெயிக்க முடிந்தது. 200 ரன்களை கடப்பதற்கு மொயின் அலிதான் காரணம்.
 

click me!