மும்பையை கதறவிட்ட வில் ஜாக்ஸ்: 5ஆவது வெற்றியை ருசித்து நம்பர் 1 இடம் பிடித்த பார்ல் ராயல்ஸ்!

By Rsiva kumarFirst Published Jan 24, 2023, 2:04 PM IST
Highlights

மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணிக்கு எதிரான போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளது.
 

தென் ஆப்பிரிக்காவில் எஸ்ஏ20 என்ற கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மொத்தமாக 6 அணிகள் பங்கு பெற்றுள்ள இந்த தொடர் கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி வரையில் எஸ் ஏ20 தொடர் நடைபெறுகிறது. நேற்றைய 20ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணியும், பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது.

திருமணத்திற்குப் பிறகு கணவன் மனைவியாக போஸ் கொடுக்கும் கேஎல் ராகுல் அதியா ஷெட்டி!

அதன்படி, முதலில் பேடி செய்த பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் குசல் மெண்டிஸ் மற்றும் வில் ஜாக்ஸ் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 88 ரன்கள் சேர்த்தனர். குசல் மெண்டிஸ் 29 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரூசோ 1 ரன்னில் வெளியேற தியுனிஸ் டி ப்ரின் 36 ரன்களும், நீசம் 22 ரன்களும் எடுத்தனர். இறுதியாக பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணி 20  ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் சேர்த்தது.

மாஸாக நடந்த கேஎல் ராகுல் அதியா ஷெட்டி திருமண நிகழ்ச்சியிக்கு யாரெல்லாம் வந்திருந்து வாழ்த்தினார்கள் தெரியுமா?

இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணி களமிறங்கியது. இதில் பிரேவிஸ் 46 ரன்களும், ரிக்கெல்டன் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீரர்கள் 1,2, 4, 6 என்று சொற்ப ரன்களில் வெளியேற மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் 18.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதியா ஷெட்டி திருமணத்திற்கு வந்த மீடியா நண்பர்களுக்கு இனிப்பு வழங்கிய சுனில் ஷெட்டி மற்றும் ஆஹான் ஷெட்டி!

பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியின் சார்பில் பந்து வீச்சில் பர்னெல் மற்றும் நோர்ட்ஜே தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். அடில் ரஷீத் 2 விக்கெட்டும், எத்தன் போஸ், வில் ஜாக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் அதிக போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது.

இதுவரையில் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி அதில் 5ல் வெற்றியும், 2ல் தோல்வியும் கண்டுள்ளது. சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 7 போட்டிகளில் விளையாடி 4ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்துள்ளது. இதே போன்று பார்ல் ராயல்ஸ் அணி 7 போட்டியில் விளையாடி 3ல் வெற்றியும், 4ல் தோல்வியும் கண்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணியும் இதே போன்று 3ல் வெற்றியும், 4ல் தோல்வியும் கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடக்கும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும், பார்ல் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இரவு 9 மணிக்கு நடக்கும் மற்றொரு போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும், டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதுகின்றன.

click me!