உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் 24 வருடங்களுக்கு முன்பு யுவராஜ் சிங் படைத்த சாதனையை தற்போது 18 வயதான பிரகார் சதுர்வேதி முறியடித்துள்ளார்.
கடந்த 1999 ஆம் ஆண்டு நடந்த கூச் பெஹார் டிராபி தொடரில் பீகார் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான அண்டர் 19 கிரிக்கெட் இறுதிப் போட்டி நடந்தது. இதில், பஞ்சாப் அணிக்காக விளையாடிய யுவராஜ் சிங் 358 ரன்கள் எடுத்தார். அதன் பிறகு எந்த வீரரும் யுவராஜ் சிங்கின் இந்த 358 ரன்கள் சாதனையை முறியிக்கவில்லை.
அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வில் எம்.எஸ்.தோனி கலந்து கொள்ள அழைப்பு!
இந்த நிலையில் தான் தற்போது 18 வயதான பிரகார் சதுர்வேதி முறியடித்துள்ளார். கூச் பெஹார் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் கர்நாடகா மற்றும் மும்பை அணிகள் மோதின. இதில், கர்நாடகா அணி சார்பில் விளையாடிய பிரகார் சதுர்வேதி 638 பந்துகளில் 46 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் உள்பட 404 ரன்கள் குவித்து யுவராஜ் சிங்கின் 24 ஆண்டுகள் சாதனையை முறியடித்துள்ளார்.
இதன் மூலமாக கர்நாடகா அணி 890 ரன்கள் குவித்தது. முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 380 ரன்கள் மட்டுமே எடுத்தது. 510 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடகா முன்னிலை பெற்றது. இதையடுத்து போட்டி டிராவில் முடிந்ததை அடுத்து முன்னிலை பெற்ற அணி அடிப்படையில் கர்நாடகா அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றது.
மஹாகாலேஷ்வர் கோயிலில் பாஸ்ம ஆர்த்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள் – வைரலாகும் வீடியோ!
இந்த நிலையில் தான் கூச் பெஹார் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் 404 ரன்கள் (நாட் அவுட்) அடித்த முதல் வீரர் என்ற சாதனையை பிரகார் சதுர்வேதி படைத்துள்ளார். கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட பிரகார், 2 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு கர்நாடகா மாநில அண்டர் 19 அணியில் இடம் பெற்று தன்னை நிரூபித்துள்ளார்.
பூரி ஜெகநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்த இத்தாலி ஹாக்கி வீராங்கனைகள்!