அவன் அவன் எடுக்குற முடிவு நமக்கு சாதகமாத்தான்யா இருக்கு!! பாண்டிங் அதிரடி

By karthikeyan VFirst Published Apr 18, 2019, 3:04 PM IST
Highlights

ரிஷப் பண்ட் புறக்கணிக்கப்பட்டதில் பெரும்பாலான முன்னாள் வீரர்களுக்கு உடன்பாடு இல்லை. ரிஷப் பண்ட் கண்டிப்பாக உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று திட்டவட்டமாக தெரிவித்துவந்தவர்களில் ஒருவர், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும் ஐபிஎல்லில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங்.
 

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில், உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது. 

நீண்ட இழுபறியில் இருந்த 4ம் வரிசை வீரருக்கான இடத்திற்கு விஜய் சங்கரையும் மாற்று விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கையும் தேர்வு செய்திருந்தது தேர்வுக்குழு. ராயுடுவிற்கு பதிலாக விஜய் சங்கர் எடுக்கப்பட்டதுகூட எதிர்பார்க்கப்பட்டது தான். ஆனால் ரிஷப் பண்ட் புறக்கணிக்கப்பட்டு தினேஷ் கார்த்திக் எடுக்கப்பட்டது அதிர்ச்சிகரமான தேர்வுதான். 

ஏனெனில் ஒருநாள் அணியில் தினேஷ் கார்த்திக்கைவிட ரிஷப் பண்ட்டுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடி, அதன்மூலம் ஒருநாள் அணியிலும் இடம்பிடித்த ரிஷப் பண்ட், உலக கோப்பை அணியில் தனது இடத்தை உறுதி செய்துவிட்டதாகவே பலரும் பார்த்தனர். வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான தொடரிலும் ரிஷப் பண்ட் தான் அணியில் இடம்பிடித்திருந்தார்.

தினேஷ் கார்த்திக் டி20 போட்டிகளுக்கு மட்டுமே எடுக்கப்பட்டதால் அவரை டி20 வீரராக மட்டுமே தேர்வுக்குழுவும் அணி நிர்வாகமும் பார்ப்பதாக ஒரு தோற்றம் இருந்தது. அதனால் ரிஷப் பண்ட்டுக்கான வாய்ப்பே இருப்பதாக தெரிந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ரிஷப் பண்ட்டை ஓரங்கட்டிவிட்டு தினேஷ் கார்த்திக்கை அணியில் எடுத்துள்ளனர். ரிஷப் பண்ட்டை விட தினேஷ் கார்த்திக் அனுபவம் வாய்ந்த மற்றும் சிறந்த விக்கெட் கீப்பர் என்பதால் அவரை அணியில் எடுத்ததாக தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கமளித்திருந்தார். 

ஆனாலும் ரிஷப் பண்ட் புறக்கணிக்கப்பட்டதில் பெரும்பாலான முன்னாள் வீரர்களுக்கு உடன்பாடு இல்லை. ரிஷப் பண்ட் கண்டிப்பாக உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று திட்டவட்டமாக தெரிவித்துவந்தவர்களில் ஒருவர், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும் ஐபிஎல்லில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங்.

இந்நிலையில், ரிஷப் பண்ட் புறக்கணிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாண்டிங், ரிஷப் பண்ட் உலக கோப்பை அணியில் எடுக்கப்படாதது எனக்கு பெரிய வியப்பை ஏற்படுத்தியது. ரிஷப் பண்ட் ஆடும் லெவனில் இருப்பார் என்கிற அளவுக்கு நான் உறுதியாக இருந்தேன். ரிஷப் பண்ட்டை போன்ற ஒருவர் 4 அல்லது 5ம் வரிசையில் இரங்கினால் அது இந்திய அணிக்கு மிகச்சிறப்பாக அமையும். ரிஷப் பண்ட் மிடில் ஆர்டரில் இறங்கினால் மற்ற அணிகளுக்கும் இந்திய அணிக்கும் இடையேயான பெரிய வித்தியாசமாக ரிஷப் இருந்திருப்பார். அவரை புறக்கணித்தது எனக்கு பெரிய ஆச்சரியம்தான் என்றார். 

ரிஷப் பண்ட்டுக்கு என்ன குறை..? அவரை ஏன் இந்திய அணியில் எடுக்கவில்லை என்று தெரியவில்லை. ஆனால் அதுவும் ஒருவகையில் நல்லதுதான். அவரது மொத்த கவனமும் தற்போது ஐபிஎல்லில் இருக்கும். அது டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு பெரிய பலமாக அமையும் என்று பாண்டிங் தெரிவித்துள்ளார். 
 

click me!