கடுப்பேத்திய பிராவோ.. கண்டுகொள்ளாத அம்பயர்கள்.. பதிலடி கொடுத்த பொல்லார்டுக்கு ஆப்படித்த ஐபிஎல் நிர்வாகம்!! வீடியோ

By karthikeyan VFirst Published May 13, 2019, 11:53 AM IST
Highlights

ஸ்டம்புக்கு நேராக போட்டால் பொல்லார்டு பொளந்துகட்டிவிடுவார் என்பது தெரிந்து, முதல் பந்தை வைடாக வீசினார் பிராவோ. 

நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று மும்பை இந்தியன்ஸ் அணி சாதனை படைத்துள்ளது. 

ஐபிஎல் வரலாற்றில் நான்காவது முறையாக மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் இறுதி போட்டியில் மோதின. இந்த போட்டியில் சிஎஸ்கே அணியை கடைசி பந்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. 

ஹைதராபாத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி வெறும் 149 ரன்கள் மட்டும்தான் எடுத்தது. ஆனால் பும்ரா, மலிங்கா, ராகுல் சாஹர் என நல்ல பவுலிங் யூனிட்டை பெற்றிருப்பதால், 150 ரன்கள் என்ற இலக்கைக்கூட எட்டவிடாமல் சிஎஸ்கே அணியை தடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி. 

மும்பை அணி தொடங்கிய வேகத்திற்கு 170 ரன்களுக்கு மேல் குவித்திருக்க வேண்டும். ஆனால் முதல் இரண்டு விக்கெட்டுகள் விழுந்ததுமே, பார்ட்னர்ஷிப் அமைப்பதில் கவனம் செலுத்தியதால் சூர்யகுமாரும் இஷான் கிஷானும் வேகமாக ரன்குவிப்பில் ஈடுபடவில்லை. அதனால் ரன்ரேட் வெகுவாக குறைந்தது. 

தீபக் சாஹர் 19வது ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டையும் வீழ்த்தினார். இதையடுத்து கடைசி ஓவரில் ரன்களை குவித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் பொல்லார்டு. ஆனால் முதல் மூன்று பந்துகளையுமே ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே தள்ளி வீசி பொல்லார்டை கட்டுப்படுத்தினார் பிராவோ. பொல்லார்டும் ஆஃப் திசையை நோக்கி நகர்ந்து சென்றதால் அந்த பந்துகளுக்கு வைடு கொடுக்கப்படவில்லை. 

ஸ்டம்புக்கு நேராக போட்டால் பொல்லார்டு பொளந்துகட்டிவிடுவார் என்பது தெரிந்து, முதல் பந்தை வைடாக வீசினார் பிராவோ. அதை அடித்த பொல்லார்டு ரன் ஏதும் ஓடவில்லை. இரண்டாவது பந்தையும் அதேமாதிரி வீசினார். ஆனால் பொல்லார்டு இந்த முறை பந்தை அடிக்கவில்லை என்றாலும், ஆஃப் திசையில் நகர்ந்ததால் வைடு கொடுக்கப்படவில்லை. ஆனால் மூன்றாவது பந்தில் பொல்லார்டு பெரிதாக நகரவில்லை. ஆனாலும் வைடாக வீசப்பட்ட அந்த பந்திற்கு வைடு கொடுக்கப்படவில்லை. அதனால் அதிருப்தியடைந்த பொல்லார்டு, விரக்தியில் பேட்டை தூக்கிப்போட்டு பிடித்தார். 

மேலும் அடுத்த பந்தை வீச பிராவோ ஓடிவரும்போது, வைடு லைனை ஒட்டி நின்று அதிர்ச்சியூட்டினார். பிராவோ பந்துவீச வந்த போது அங்கிருந்து நக்கலாக நகர்ந்துசென்றுவிட்டார். பொல்லார்டின் இந்த செயலை அம்பயர்கள் கூப்பிட்டு கண்டித்தனர். தொடர்ந்து வைடாக வீசியதால் கடுப்பாகிய பொல்லார்டு, நீ எப்படியும் இங்கதான் போடப்போற என்கிற ரீதியில் வைடு லைனை ஒட்டி நின்றார். அந்த வீடியோ இதோ.. 

அம்பயர்களின் முடிவுக்கு எதிரான தனது எதிர்ப்பை காட்டியதால் பொல்லார்டுக்கு போட்டியின் ஊதியத்தில் 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

click me!