BBL: ஆஸி., வீரரின் மூக்கை உடைத்த காலின் முன்ரோ! வடியும் ரத்தத்தையும் பொருட்படுத்தாத வெற்றி கொண்டாட்டம்! வீடியோ

By karthikeyan VFirst Published Jan 29, 2022, 6:43 PM IST
Highlights

பிக்பேஷ் லீக் டைட்டிலை 4வது முறையாக வென்ற வெற்றி கொண்டாட்டத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி ஈடுபட்டிருந்தபோது, அந்த அணியின் வீரர் ஜெய் ரிச்சர்ட்ஸனின் மூக்குடைந்து ரத்தம் வடிந்தது. ஆனால் ரத்தத்தையும் பொருட்படுத்தாமல் வெற்றி கொண்டாட்டத்தில் ரிச்சர்ட்ஸன் மும்முரமாக இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் டி20 லீக் தொடரான பிக்பேஷ் லீக்கில் 4வது முறையாக தொடரை வென்றது பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி வென்றது. 

மெல்போர்னில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி இவான்ஸின் அதிரடி அரைசதத்தால்(76) 20 ஓவரில் 171 ரன்கள் அடித்தது. 172 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சிட்னி சிக்ஸர்ஸை வெறும் 92 ரன்களுக்கு சுருட்டி 79 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த அபார வெற்றியின் மூலம் 4வது முறையாக கோப்பையை வென்றது பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி. இந்த வெற்றியை வெகுவாக கொண்டாடி தீர்த்தனர் அந்த அணியினர். வீரர்கள் ஒன்றாக கூடி வெற்றியை கொண்டாடியபோது ஜெய் ரிச்சர்ட்ஸனின் மூக்கில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. வடியும் ரத்தத்தையும் பொருட்படுத்தாமல் வெற்றி கொண்டாட்டத்தில் மும்முரமாக இருந்தார் ஜெய் ரிச்சர்ட்ஸன்.

ரத்தத்துடன் பேசிய ரிச்சர்ட்ஸன், நான் அப்பீல் செய்வதில் பிசியாக இருந்தபோது டீப் ஸ்கொயர் லெக்கில் இருந்து ஓடிவந்த காலின் முன்ரோவின் தோள்பட்டை என் மூக்கில் பட்டு அடிபட்டது. பரவாயில்லை இந்த அடி ஒர்த் தான் என்றார் ரிச்சர்ட்ஸன்.
 

When celebrations go wrong, featuring Jhye Richardson 😂 pic.twitter.com/xAkvP59fqy

— 7Cricket (@7Cricket)
click me!