தோனி ஃபீல்டரை மாற்றிய அடுத்த 2 பந்தில் விக்கெட்! நான் அப்படியே மிரண்டு போயிட்டேன்! தல வேற லெவல்-லுங்கி இங்கிடி

By karthikeyan VFirst Published Jan 29, 2022, 4:48 PM IST
Highlights

தோனியின் கேப்டன்சியில் ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியில் ஆடியபோது தான் கற்றுக்கொண்ட விஷயங்களை பற்றி தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலர் லுங்கி இங்கிடி பேசியிருக்கிறார்.
 

சர்வதேச கிரிக்கெட், ஐபிஎல் என அனைத்திலும் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தவர் தோனி. சர்வதேச கிரிக்கெட்டில் டி20 உலக கோப்பை (2007), ஒருநாள் உலக கோப்பை (2011) மற்றும் சாம்பியன்ஸ் டிராபி (2013) ஆகிய 3 விதமான ஐசிசி டிராபியையும் ஒரே கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் தோனி.

ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்கு 4 முறை கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார். ரோஹித் சர்மாவுக்கு (5 முறை) அடுத்து அதிக முறை கோப்பையை வென்ற கேப்டன் என்ற பெருமைக்குரியவர் தோனி. தோனி தலைமையில் சிஎஸ்கே அணி ஒரேயொரு சீசனில் மட்டுமே பிளே ஆஃபிற்கு செல்லவில்லை. மற்ற அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்ற சிஎஸ்கே அணி, 9 முறை ஃபைனலுக்கு முன்னேறி அதில் 4 முறை டைட்டிலை வென்றுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் பெஸ்ட் கேப்டன்களில் ஒருவர் தோனி. அபாரமான கிரிக்கெட் மூளைக்காரர். ஆட்டத்தை போக்கை கணிக்கும் அவரது திறன், களவியூகம், வீரர்களை கையாளும் விதம், நெருக்கடியான சூழல்களை மிகக்கூலாக கையாளும் விதம், ஃபீல்டிங் செட்டப், உள்ளுணர்வின் படி அவர் எடுக்கும் திடீர் முடிவுகள் என அனைத்துமே பிரமிப்பை ஏற்படுத்தும். அவையனைத்தும், ஆட்டத்தை தலைகீழாக மாற்றுவதுடன் போட்டியின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தும். அவரது கேப்டன்சி திறனால் தான் அவர் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தார்.

இந்நிலையில், தோனி தன்னை வியக்கவைத்த தருணத்தை பகிர்ந்துகொண்டுள்ள லுங்கி இங்கிடி, அவரிடமிருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள் பற்றி பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய லுங்கி இங்கிடி, 2018 ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக நாங்கள் (சிஎஸ்கே) ஃபைனலில் ஆடினோம். அப்போது, எனது பவுலிங்கின்போது ஒரு குறிப்பிட்ட ஃபீல்டரை திடீரென மாற்றினார் தோனி. தோனி ஃபீல்டரை மாற்றிய அடுத்த 2 பந்தில் விக்கெட் (தீபக் ஹூடா) விழுந்தது. அது என் மனதில் அழுத்தமாக பதிந்ததுடன், வியப்பையும் ஏற்படுத்தியது. ஃபைனல் மேட்ச்சில், இதுமாதிரியான திடீர் பிளானை செயல்படுத்தி ஒரு பெரிய முமெண்ட்டை பெறுவது என்பது, ஒரு பவுலராக எப்படி பந்துவீச வேண்டும் என்ற நம்பிக்கையை எனக்கு கொடுத்தது.

அணியை அவர் கட்டுப்படுத்தும் விதம், ஃபீல்ட் செட்டப், அவரது பொறுமை - நிதானம், கேம் பிளான், ஒரு இன்னிங்ஸில் பவுலிங்கை எப்படி ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது போன்ற வீஷயங்களை அவரிடமிருந்து கற்றுக்கொண்டதாக இங்கிடி தெரிவித்தார்.
 

click me!