ஓவர் கான்ஃபிடன்ஸில் தான் அந்த ஸ்கூப்ஷாட்டை அடித்தேன்-மிஸ்பா! தோனி விரித்த வலையில் தொக்கா சிக்கியது பற்றி வேதனை

By karthikeyan VFirst Published Jan 29, 2022, 5:33 PM IST
Highlights

2007 டி20 உலக கோப்பை ஃபைனலில் இந்தியாவிற்கு எதிராக கடைசி ஓவரில் ஸ்கூப் ஷாட் ஆடி அவுட்டான மிஸ்பா உல் ஹக், அதீத நம்பிக்கையில் தான் அந்த ஷாட்டை ஆடியதாக தெரிவித்திருக்கிறார்.
 

2007 டி20 உலக கோப்பை தான் இந்திய அணியை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திய மிக முக்கியமான தொடர். 2007ல் ஒருநாள் உலக கோப்பையில் ராகுல் டிராவிட் தலைமையில் லீக் சுற்றுடன் வெளியேறி மரண அடி வாங்கியது இந்திய அணி. க்ரேக் சேப்பலின் பயிற்சிக்காலத்தில் சிதைந்துபோய் கிடந்த இந்திய அணி, உலக கோப்பையிலும் தோற்று மோசமாக நொறுங்கி போயிருந்தது.

ஒருநாள் உலக கோப்பை தோல்விக்கு பிறகு ராகுல் டிராவிட் கேப்டன்சியிலிருந்து விலக, வெள்ளைப்பந்து கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.  தோனி கேப்டன் பொறுப்பை ஏற்ற உடனேயே, முதல் டி20 உலக கோப்பையை வென்றது இந்திய அணிக்கு புதிய உத்வேகத்தை கொடுத்தது. ஒருநாள் உலக கோப்பை தோல்விக்கு, டி20 உலக கோப்பை வெற்றி மருந்தாகவும் அமைந்தது.

அந்த டி20 உலக கோப்பை வெற்றியிலிருந்து இந்திய கிரிக்கெட்டில் தோனி தலைமையில் புதிய அத்தியாயம் தொடங்கியது. 

2007 டி20 உலக கோப்பை ஃபைனலில் இந்திய அணியின் வெற்றி, தோனியின் திறமையான, சாமர்த்தியமான, புத்திக்கூர்மையான கேப்டன்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும். ஏனெனில் யாருமே எதிர்பார்த்திராத, விரும்பாத வகையில் ஜோகிந்தர் சர்மாவிடம் கடைசி ஓவரை கொடுத்தார் தோனி. சீனியர் பவுலரான ஹர்பஜன் சிங்கிற்கு ஒரு ஓவர் எஞ்சியிருந்த நிலையில், அவரிடம் பந்தை கொடுக்காமல் ஜோகிந்தர் சர்மாவிடம் கொடுத்தார் கேப்டன் தோனி.

158 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியின் கையில் கடைசி ஓவரில் ஒரு விக்கெட் மட்டுமே எஞ்சியிருந்தது. ஆனால் நன்கு செட்டில் ஆன வீரரான மிஸ்பா உல் ஹக் களத்தில் இருந்தார். அவரது விக்கெட்டை கடைசி ஓவரின் 3வது பந்தில், தோனி போட்ட ஸ்கெட்ச்சின் உதவியுடன் வீழ்த்தினார் ஜோகிந்தர் சர்மா.

அந்த தொடர் முழுவதுமாகவே ஸ்கூப் ஷாட்டுகளை  அதிகமாக ஆடிய மிஸ்பா உல் ஹக், கண்டிப்பாக அந்த ஷாட்டை ஆடுவார் என்பதை அறிந்துதான் ஃபைன் லெக் திசையில் ஃபீல்டரை நிறுத்தினார் தோனி. மிஸ்பாவின் பலமான ஸ்கூப் ஷாட்டை வைத்தே அவரை வீழ்த்த வலைவிரித்தார் தோனி. அதனால் தான் அவர் ஸ்கூப் ஷாட் ஆடுவதற்கேற்ற பவுலரான ஜோகிந்தரை பந்துவீசவைத்தார். அதேபோலவே மிஸ்பா உல் ஹக், கடைசி ஓவரின் 3வது பந்தை ஸ்கூப் ஷாட் ஆடமுயன்று ஸ்ரீசாந்த்திடம் கேட்ச் கொடுத்து 43 ரன்னில் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க, இந்திய அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் டி20 உலக கோப்பையை வென்றது.

இந்நிலையில், அந்த ஷாட் ஆடியது குறித்து 15 ஆண்டுகளுக்கு பிறகு மனம் திறந்து பேசியுள்ளார் மிஸ்பா உல் ஹக். இதுகுறித்து பேசிய மிஸ்பா உல் ஹக், 2007 டி20 உலக கோப்பை தொடர் முழுவதுமாகவே நான் ஸ்கூப் ஷாட்டின் மூலம் நிறைய பவுண்டரிகள் அடித்தேன். ஃபைன் லெக் திசையில் ஃபீல்டர்கள் இருந்தபோதிலும் கூட, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஸ்கூப் ஷாட் ஆடி சிங்கிள்ஸ் எடுத்தேன். ஸ்பின்னர்களுக்கு எதிராக அந்த ஷாட்டின் மூலம் ஃபைன் லெக் திசையில் கிளியர் செய்தேன். எனவே அதீத நம்பிக்கையில் தான் ஃபைனலில் அந்த ஸ்கூப் ஷாட்டை ஆடினேன். ஆனால் டைமிங் சரியில்லாததால் ஆட்டமிழந்தேன் என்று மிஸ்பா உல் ஹக் தெரிவித்தார்.

டைமிங் அவர் ஆடிய ஷாட்டில் சரியில்லாததால் தான், இந்தியாவின் டைமிங் அமோகமாக இருந்தது.
 

click me!