BBL: ஃபைனலில் இவான்ஸ் அதிரடி பேட்டிங்.. சிட்னி சிக்ஸர்ஸுக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்

Published : Jan 28, 2022, 04:08 PM IST
BBL: ஃபைனலில் இவான்ஸ் அதிரடி பேட்டிங்.. சிட்னி சிக்ஸர்ஸுக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்

சுருக்கம்

பிக்பேஷ் லீக் தொடரின் ஃபைனலில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு 172 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி.  

ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் டி20 லீக் தொடரான பிக்பேஷ் லீக் தொடரின் இறுதிப்போட்டி இன்று மெல்போர்னில் நடந்துவருகிறது. 

பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகளுக்கு இடையேயான இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற சிக்ஸர்ஸ் அணி, ஸ்கார்ச்சர்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.

ஸ்கார்ச்சர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் பாட்டர்சன் (1) மற்றும் ஜோஷ் இங்லிஸ் (13) ஆகிய இருவருமே சொதப்ப, அதன்பின்னர் வந்த முக்கியமான வீரர்களான மிட்செல் மார்ஷ் (5) மற்றும் காலின் முன்ரோ (1) ஆகியோரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். 6 ஓவரில் வெறும் 25 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி.

5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் அஷ்டான் டர்னர் மற்றும் லாரி இவான்ஸ் ஆகிய இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக பேட்டிங் ஆடி 5வது விக்கெட்டுக்கு 10 ஓவரில் 104 ரன்களை குவித்தனர். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த டர்னர் 35 பந்தில் 54 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னரும் அதிரடியை தொடர்ந்த இவான்ஸ் 41 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 76 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் நின்று பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 20 ஓவரில் 171 ரன்களை குவிக்க உதவினார்.

இதையடுத்து 172 ரன்கள் என்ற சவாலான இலக்கை சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி நிர்ணயித்துள்ளது. சிக்ஸர்ஸ் அணி கோப்பையை தூக்க வேண்டுமென்றால் அந்த அணிக்கு 172 ரன்கள் தேவை.
 

PREV
click me!

Recommended Stories

Hardik Pandya Trade: தோனியுடன் ரகசிய சந்திப்பா? மும்பையை விட்டு சென்னைக்கு வரும் ஹர்திக் பாண்டியா!
Abhishek Sharma: சரவெடியாக வெடித்து சிதறிய அபிஷேக்..! 91 பந்துகளில் 25 சிக்சர், 233 ரன்கள் குவிப்பு