BBL: பான்கிராஃப்ட், ஹார்டி அதிரடி அரைசதம்.. பிரிஸ்பேன் ஹீட்டை ஈசியா வீழ்த்தி பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அபார வெற்றி

By karthikeyan VFirst Published Jan 7, 2023, 8:16 PM IST
Highlights

பிக்பேஷ் லீக்கில் பிரிஸ்பேன் ஹீட் நிர்ணயித்த 172 ரன்கள் என்ற இலக்கை 17வது ஓவரிலேயே அடித்து பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
 

பிக்பேஷ் டி20 லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று பெர்த்தில் நடந்த போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி:

கேமரூன் பான்கிராஃப்ட், ஸ்டீஃபன் எஸ்கினாஸி, ஆரோன் ஹார்டி, ஜோஷ் இங்லிஸ் (விக்கெட் கீப்பர்), அஷ்டான் டர்னர் (கேப்டன்), நிக் ஹாப்சன், கூப்பர் கானாலி, மேத்யூ கெல்லி, ஆண்ட்ரூ டை, ஜேசன் பெஹ்ரண்டார்ஃப், லான்ஸ் மோரிஸ்.

இதுதான் ஒருநாள் உலக கோப்பைக்கான எனது இந்திய அணி.. அவங்க 2 பேருக்கும் கண்டிப்பா இடம் இல்ல..! ஸ்ரீகாந்த் அதிரடி

பிரிஸ்பேன் ஹீட் அணி:

ஜோஷ் பிரௌன், காலின் முன்ரோ, நேதன் மெக்ஸ்வீனி, சாம் பில்லிங்ஸ், ஜிம்மி பியர்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), மேக்ஸ் பிரையண்ட், ரோஸ் ஒயிட்லி, மைக்கேல் நெசெர், மார்க் ஸ்டெகெட்டீ, மேத்யூ குன்னெமேன், மிட்செல் ஸ்வெப்சன்.

முதலில் பேட்டிங்  ஆடிய பிரிஸ்பேன் ஹீட் அணியின் தொடக்க வீரர்கள் காலின் முன்ரோ மற்றும் ஜோஷ் பிரௌன் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். காலின் முன்ரோ 26 பந்தில் 45 ரன்களும், ஜோஷ் பிரௌன் 21 பந்தில் 34 ரன்களும் அடித்தனர். சாம் பில்லிங்ஸ் 27 ரன்களும், பியர்சன் 23 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 171 ரன்கள் அடித்தது பிரிஸ்பேன் ஹீட் அணி.

172 ரன்கள் என்ற சவாலான இலக்கை அடித்த பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் தொடக்க வீரர் ஸ்டீஃபன் ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான கேமரூன் பான்கிராஃப்ட் மற்றும் 3ம் வரிசையில் இறங்கிய ஆரோன் ஹார்டி ஆகிய இருவரும் இணைந்து மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி இருவருமே அரைசதம் அடித்து 2வது விக்கெட்டுக்கு 111 ரன்களை குவித்தனர்.  

பயிற்சியில் நோ பால் வீசி பழக்கப்பட்டதுதான் காரணம்..! அர்ஷ்தீப் சிங், பவுலிங் கோச்சை விளாசிய கம்பீர்

ஆரோன் ஹார்டி 33 பந்தில் 57 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். கேமரூன் பான்கிராஃப்ட் 48 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 76 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். அவரது அதிரடியால் 16.3 ஓவரில் இலக்கை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
 

click me!