பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 59ஆவது போட்டி நேற்று டெல்லியில் நடந்தது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்து வீசியது. அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் ஆடியது. இதில், தொடக்க வீரர் பிராப்சிம்ரன் அதிரடியாக ஆடி 65 பந்துகளில் 6 சிக்ஸர்கள் 10 பவுண்டரிகள் உள்பட 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஹைதராபாத் பிளே ஆஃப் வாய்ப்பு எப்படி? GT, RCB, MI அணிகளை ஓட ஓட விரட்டினால் அமையுமா?
பின்னர் ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணியில் டேவிட் வார்னர் மற்றும் பிலிப் சால்ட் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 69 ரன்கள் சேர்த்தனர். பிலிப் சால்ட் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். வார்னரோ தன் பங்கிற்கு 54 ரன்கள் சேர்த்துக் கொடுத்தார். ஆனால், பின்வரிசை வீர்ரகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே டெல்லிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தான். இறுதியாக 20 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 136 ரன்கள் மட்டுமே டெல்லி கேபிடல்ஸ் அணி எடுத்து 31 ரன்கள் வித்தியாத்தில் தோல்வி அடைந்தது.
உலகக் கோப்பை ஜெயிக்க கண்டிப்பாக இந்த 2 பேருக்கு வாய்ப்பு கொடுக்கணும் – ரவி சாஸ்திரி!
ஏற்கனவே கடைசி இடத்தில் இருந்த டெல்லி கேபிடல்ஸ் இந்த போட்டியில் தோற்று முதல் அணியாக தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக பஞ்சாப் கிங்ஸ் அணி 12 புள்ளிகளுடன் 6ஆவது இடத்திற்கு முன்னேறியது. இன்னும் 2 போட்டிகள் எஞ்சிய நிலையில், அந்த 2 போட்டியிலும் பஞ்சாப் வெற்றி பெற்றால் 16 புள்ளிகள் பெறும்.
குஜராத் அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்த ரஷீத் கான்!
புள்ளிப்பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ள நிலையில், பஞ்சாப் அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் புள்ளிகள் மற்றும் ரன்ரேட் அடிப்படையில் பஞ்சாப் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு அமையும்.
கடைசியாக கொடுத்த வாய்ப்பு: நிரூபித்து காட்டிய விஷ்ணு வினோத்!