ஹைதராபாத் பிளே ஆஃப் வாய்ப்பு எப்படி? GT, RCB, MI அணிகளை ஓட ஓட விரட்டினால் அமையுமா?

By Rsiva kumar  |  First Published May 13, 2023, 9:20 PM IST

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்த நிலையில் அதனுடைய பிளே ஆஃப் வாய்ப்பு குறைந்துள்ளது.


ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பரபரப்பான கட்டத்தை எட்டிவிட்டது. ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் வாய்ப்புக்காக கடுமையாக போராடி வருகின்றன. இதில் இன்னமும் புள்ளிப்பட்டியலில் கடைசி இடங்களில் உள்ள அணிகளுக்கும் பிளே ஆஃப் வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. ஹைதராபாத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதரபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

உலகக் கோப்பை ஜெயிக்க கண்டிப்பாக இந்த 2 பேருக்கு வாய்ப்பு கொடுக்கணும் – ரவி சாஸ்திரி!

Tap to resize

Latest Videos

அதன்படி முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் பிரேரக் மான்கட் அதிரடியாக ஆடி 45 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். இதே போன்று நிக்கோலஸ் பூரன் 44 ரன்கள் குவித்தார்.

குஜராத் அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்த ரஷீத் கான்!

முதல் 10 ஓவருக்கு 2 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் மட்டுமே லக்னோ அணி எடுத்திருந்தது. அதன் பிறகு ஒவ்வொரு ஓவரிலும் 10 ரன்களுக்கு மேல் எடுத்தது. 12 ஓவர்கள் வரையில் ஹைதராபாத் கையில் இருந்த ஆட்டம், 13 ஆவது ஓவர் முதல் லக்னோ பக்கம் திரும்பியது.

13ஆவது ஓவர் – 14 ரன்கள்

14ஆவது ஓவர் – 14 ரன்கள்

15ஆவது ஓவர் – 11 ரன்கள்

16ஆவது ஓவர் – 31 ரன்கள்

17ஆவது ஓவர் – 14 ரன்கள்

18ஆவது ஓவர் – 10 ரன்கள்

19ஆவது ஓவர் – 10 ரன்கள்

19.2ஆவது ஓவர் – 6 ரன்கள்

இப்படி வரிசையாக அதிக ரன்கள் எடுத்தது. கடைசி 8 ஓவர்களில் லக்னோ அணி 108 ரன்கள் குவித்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலமாக 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், புள்ளிப்பட்டியலில் 13 புள்ளிகளுடன் 4ஆவது இடமும் பிடித்துள்ளது. 3ஆவது இடத்தில் 14 புள்ளிகளுடன் மும்பை இந்தியன்ஸ் அணியும், 2ஆவது இடத்தில் 15 புள்ளிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், முதலிடத்தில் 16 புள்ளிகளுடன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் இடம் பெற்றுள்ளன.

கடைசியாக கொடுத்த வாய்ப்பு: நிரூபித்து காட்டிய விஷ்ணு வினோத்!

இந்தப் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், ஹைதராபாத் அணிக்கு இன்னமும் பிளே ஆஃப் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அதற்கு ஹைதராபாத் அணி இனி வரும் போட்டிகளில் அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுடன் ஹைதராபாத் இனி வரும் போட்டிகளில் மோத இருக்கிறது. இந்தப் போட்டிகளிலும் ஹைதராபாத் அதிக ரன் ரேட் அடிப்படையில் வெற்றி பெற வேண்டும்.

3ஆவது இடத்தில் மும்பை: இக்கட்டான நிலையில் LSG, RR, RCB, PBKS!

மூன்று போட்டிகளில் 2 போட்டியில் வெற்றி பெற்றால் 14 புள்ளிகள் பெறும். ஆனால், பிளே ஆஃப் வாய்ப்பு கடினம் தான். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நாளை நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றால் 14 புள்ளிகள் பெறும். மேலும், புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்திற்கு செல்லும். ஆதலால், ஹைதராபாத் அணிக்கு வாய்ப்பு ரொம்பவே குறைவு தான்.

click me!