IPL 2023: DC vs PBKS டாஸ் ரிப்போர்ட்.. இரு அணிகளிலும் ஒரு அதிரடி மாற்றம்

Published : May 13, 2023, 07:30 PM IST
IPL 2023: DC vs PBKS டாஸ் ரிப்போர்ட்.. இரு அணிகளிலும் ஒரு அதிரடி மாற்றம்

சுருக்கம்

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.  

ஐபிஎல் 16வது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. ஒவ்வொரு போட்டியுமே புள்ளி பட்டியலில் தாக்கத்தை ஏற்படுத்தும். இன்று பிற்பகல் தொடங்கி நடந்த போட்டியில் சன்ரைசர்ஸை வீழ்த்தி புள்ளி பட்டியலில் 4ம் இடத்திற்கு முன்னேறியது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஆடுகின்றன. டெல்லி அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்தியாவின் எதிர்ப்புக்கு அடிபணிந்த பாகிஸ்தான்! வேறு நாட்டுக்கு மாற்றப்படும் ஆசிய கோப்பை? எந்த நாடு தெரியுமா.?

டெல்லி கேபிடள்ஸ் அணியில் ரிப்பல் படேலுக்கு பதிலாக பிரவீன் துபே என்ற வீரர் இறங்குகிறார். பஞ்சாப் கிங்ஸ் அணியில் பானுகா ராஜபக்சாவுக்கு பதிலாக சிக்கந்தர் ராஸா இறக்கப்பட்டுள்ளார்.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

டேவிட் வார்னர் (கேப்டன்), ஃபிலிப் சால்ட், மிட்செல் மார்ஷ், ரைலீ ரூசோ, அமான் கான், அக்ஸர் படேல், பிரவீன் துபே, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, கலீல் அகமது, முகேஷ் குமார்.

IPL 2023: நீ நல்ல ஃபினிஷர் ஆகணும்னா இதை மட்டும் செய்..! ரிங்கு சிங்கிற்கு தல தோனியின் தரமான அட்வைஸ்

பஞ்சாப் கிங்ஸ் அணி:

பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜித்தேஷ் ஷர்மா, சாம் கரன், சிக்கந்தர் ராஸா, ஷாருக்கான், ஹர்ப்ரீத் பிரார், ரிஷி தவான், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Rohit Sharma: ரிட்டையர்மென்ட் வதந்திக்கு பேட்டால் பதிலடி! லார்ட்ஸில் வரலாற்று சதம் அடித்த ஹிட்மேன்!
IND vs ENG: ரோஹித் சதம் அடித்தும் இந்தியா தோல்வி... லார்ட்ஸில் கோட்டைவிட்ட 5 இடங்கள்..