PBKS vs CSK: பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஒரு மாற்றம்..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

Published : Apr 25, 2022, 02:29 PM IST
PBKS vs CSK: பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஒரு மாற்றம்..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன. சிஎஸ்கே அணி தொடர் தோல்விகளிலிருந்து மீண்டு வெற்றிப்பயணத்தை தொடங்கியுள்ளது. எனவே அடுத்த வெற்றியை பெறும் முனைப்பில் இன்று களமிறங்குகிறது சிஎஸ்கே அணி.

மும்பை வான்கடேவில் நடக்கும் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்படலாம். பஞ்சாப் அணீயில் மீண்டும் ஒடீன் ஸ்மித் சேர்க்கப்படலாம். அதனால் நேதன் எல்லிஸ் நீக்கப்படுவார். 

உத்தேச பஞ்சாப் கிங்ஸ் அணி:

மயன்க் அகர்வால் (கேப்டன்), ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோ, லியாம் லிவிங்ஸ்டோன், ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), ஷாருக்கான், ஒடீன் ஸ்மித், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், வைபவ் அரோரா.

சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே காம்பினேஷனுடன் தான் களமிறங்கும்.

உத்தேச சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மிட்செல் சாண்ட்னெர், அம்பாதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), தோனி (விக்கெட் கீப்பர்), ட்வைன்ன் ப்ரிட்டோரியஸ், ட்வைன் பிராவோ, மஹீஷ் தீக்‌ஷனா, முகேஷ் சௌத்ரி.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வீரர்களுக்காக கண்கொத்தி பாம்பாய் காத்திருக்கும் அணிகள்.. அபுதாபியில் இன்று IPL மினி ஏலம்
IND vs SA T20: ஆல்ரவுண்டர் விலகல்.. இந்திய அணிக்கு பின்னடைவு.. மாற்று வீரர் இவரா? ரசிகர்கள் ஷாக்!