LSG vs MI: கேஎல் ராகுல் அபார சதம்.. இழுத்துப்பிடித்த மும்பை அணி பவுலர்கள்.! சவாலான இலக்கை நிர்ணயித்த லக்னோ அணி

Published : Apr 24, 2022, 09:49 PM IST
LSG vs MI: கேஎல் ராகுல் அபார சதம்.. இழுத்துப்பிடித்த மும்பை அணி பவுலர்கள்.! சவாலான இலக்கை நிர்ணயித்த லக்னோ அணி

சுருக்கம்

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 20 ஓவரில் 168 ரன்கள் அடித்து 169 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.  

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸூம் ஆடிவருகின்றன. மும்பை வான்கடேவில் நடந்துவரும் இந்த போட்டியில், முதல் வெற்றியை பெறும் முனைப்பில் களமிறங்கியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), டிவால்ட் பிரெவிஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா,பொல்லார்டு, டேனியல் சாம்ஸ், ரித்திக் ஷோகீன், ரிலே மெரிடித், ஜெய்தேவ் உனாத்கத், ஜஸ்ர்ப்ரித் பும்ரா.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, மார்கஸ் ஸ்டோய்னிஸ், தீபக் ஹூடா, ஆயுஷ் பதோனி, க்ருணல் பாண்டியா, ஜேசன் ஹோல்டர், துஷ்மந்தா சமீரா, ரவி பிஷ்னோய், மோசின் கான்.

முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணியில் ஒருமுனையில் கேஎல் ராகுல் நிலைத்து நின்று அடித்து ஆடிய நிலையில், மறுமுனையில் டி காக்(10), மனீஷ் பாண்டே(22), மார்கஸ் ஸ்டோய்னிஸ்(0) ஆகியோர் ஏமாற்றமளித்தனர்.

ராகுல் அடித்து ஆடினாலும், மறுமுனையில் மற்ற வீரர்களை அடிக்கவிடாமல் இழுத்துப்பிடித்து ஸ்கோரை கட்டுப்படுத்தினர் மும்பை பவுலர்கள். க்ருணல் பாண்டியா(1), தீபக் ஹூடா(10), ஆயுஷ் பதோனி(14) ஆகியோரும் ஆட்டமிழந்தனர். ஆனால் மறுமுனையில் நங்கூரம் போட்டு அடித்து ஆடிய ராகுல் சதமடித்தார். இந்த சீசனில் 2வது சதத்தை பதிவு செய்தார் ராகுல். 62 பந்தில் 103 ரன்களை குவித்தார் ராகுல். ஆனாலும் மற்ற வீரர்கள் சொதப்பியதால் 20 ஓவரில் 168 ரன்கள் மட்டுமே அடித்தது லக்னோ அணி.

169 ரன்கள் என்ற இலக்கை விரட்டிவருகிறது மும்பை இந்தியன்ஸ் அணி.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SL Test: 33 வயதில் இந்திய அணியில் அறிமுகமாகும் வீரர்! யார் இந்த சரன்ஷ் ஜெயின்? பிசிசிஐ தேர்வு செய்தது ஏன்?
Hidden Talents: பாட்டு, டான்ஸ், மெக்கானிக்... நம்ம கிரிக்கெட் வீரர்களின் மறுபக்கம்..!