
அதன்படி இந்திய அணி சார்பில் ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் ஜோடி நிதான தொடக்கத்தை வழங்கினர். ஜெய்ஸ்வால் 58, ராகுல் 46, சாய் சுதர்சன் 61 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தது. அப்போது களம் இறங்கிய ரிஷப் பண்ட் தனது ஸ்டைலில் ஷாட்களை தேர்வு செய்து சிறப்பாக ஆடி வந்தார்.
48 பந்துகளில் 2 பவுண்டரி, 1 சிக்சர் என 37 ரன்களை சேர்த்த பண்ட் கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தை ஸ்வீப் ஷாட் ஆட முயன்றார். ஆனால் பந்து பேட்டில் படுவதற்கு பதிலாக பண்ட்டின் காலில் பலமாக தாக்கியது. இதனால் வலியில் துடித்த பண்ட்ஐ உடனடியாக மருத்துவர்கள் பரிசோதித்தனர். அவர் தொடர்ந்து வலியால் துடித்ததால் தொடர்ந்து விளையாட முடியாமல் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் மைதானத்தில் இருந்து வெளியேறினார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் பண்ட்ஐ பரிசோதித்த மருத்துவர்கள் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் ஒன்றரை மாத காலம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. இதனால் அவர் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே 128 கிமீ வேகத்தில் வரக்கூடிய பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஆடலாமா இது உங்களுக்கு தெரிய வேண்டாமா? டெஸ்ட் போட்டி தானே விளையாடுறீங்க நிதானமா ஆட மாட்டீங்களா என முன்னாள் வீரர்கள் பண்ட்க்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.