#PAKvsNZ டாஸ் ரிப்போர்ட்..! டி20 உலக கோப்பையிலிருந்து விலகிய நியூசி., நட்சத்திர வீரர்..! நியூசி.,க்கு மரண அடி

By karthikeyan VFirst Published Oct 26, 2021, 7:37 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
 

டி20 உலக கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக ஆடிய முதல் போட்டியில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் மிகச்சிறப்பாக செயல்பட்டு, இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, அந்த உற்சாகத்துடன் இன்று நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையேயான இந்த போட்டி ஷார்ஜாவில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம், ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்தியாவுக்கு எதிராகவும் முதலில் பந்துவீசி, இந்திய அணியை 151 ரன்களுக்கு கட்டுப்படுத்தி அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, அதே ஃபார்முலாவை நியூசிலாந்துக்கு எதிராகவும் பின்பற்றுகிறது.

பாகிஸ்தான் அணியில் எந்த மாற்றமும் செய்வதற்கான அவசியமே இல்லை. அதனால் கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் ஆடுகிறது.

பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம்(கேப்டன்), முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), ஃபகர் ஜமான், முகமது ஹஃபீஸ், ஷோயப் மாலிக், ஆசிஃப் அலி, இமாத் வாசிம், ஷதாப் கான், ஹசன் அலி, ஹாரிஸ் ராஃப், ஷாஹீன் அஃப்ரிடி.

நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரும், மிரட்டலான ஃபாஸ்ட் பவுலருமான லாக்கி ஃபெர்குசன் இந்த டி20 உலக கோப்பை தொடரிலிருந்தே விலகியுள்ளதாக கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்தார். அண்மையில் அமீரகத்தில் நடந்து முடிந்த ஐபிஎல்லில் கூட கேகேஆர் அணிக்காக அபாரமாக பந்துவீசியிருந்தார் ஃபெர்குசன். எனவே அந்த ஃபார்மை டி20 உலக கோப்பையில் நியூசிலாந்து அணிக்காக தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் டி20 உலக கோப்பையிலிருந்து விலகியதாக அதிர்ச்சி தகவலை சொன்னார் கேன் வில்லியம்சன். இது அந்த அணிக்கு பெரும் பாதிப்பாக அமையும்.

நியூசிலாந்து அணி:

மார்டின் கப்டில், டேரைல் மிட்செல், கேன் வில்லியம்சன்(கேப்டன்), டெவான் கான்வே, க்ளென் ஃபிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், டிம் சேஃபெர்ட்(விக்கெட் கீப்பர்), மிட்செல் சாண்ட்னெர், இஷ் சோதி, டிம் சௌதி, டிரெண்ட் போல்ட்.
 

click me!