PAK vs ENG: தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி..! டாஸ் ரிப்போர்ட்

Published : Oct 02, 2022, 07:50 PM IST
PAK vs ENG: தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி..! டாஸ் ரிப்போர்ட்

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 7 டி20 போட்டிகள் கொண்ட பெரிய தொடரில் ஆடிவருகிறது. 6 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 3 வெற்றிகளை பெற்றதால் 3-3 என தொடர் சமனில் உள்ளது.

இதையும் படிங்க - புவனேஷ்வர் குமாரை விட அவர் பன்மடங்கு சிறந்த பவுலர்..! T20 WC-ல் அவரை ஆடவைங்க.. டேனிஷ் கனேரியா அட்வைஸ்

தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று லாகூரில் நடக்கிறது. இந்த தொடரில் இரு அணிகளுமே மிகச்சிறப்பாக ஆடிய நிலையில், கடைசி டி20 போட்டி மிகக்கடுமையான போட்டியாக இருக்கும். இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஷான் மசூத், இஃப்டிகார் அகமது, குஷ்தில் ஷா, ஆசிஃப் அலி, ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம், ஹாரிஸ்ராஃப், முகமது ஹஸ்னைன்.

இதையும் படிங்க - தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய ஒருநாள் அணி அறிவிப்பு! கேப்டன் தவான்.. 2 வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு

இங்கிலாந்து அணி:

ஃபிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மலான், பென் டக்கெட், ஹாரி ப்ரூக், மொயின் அலி (கேப்டன்), சாம் கரன், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷீத், ரீஸ் டாப்ளி.
 

PREV
click me!

Recommended Stories

IND vs ENG 1st T20: இந்திய அணியில் 4 வீரர்கள் அதிரடி நீக்கம்! சஞ்சு சாம்சனுமா? பிளேயிங் லெவன்!
IRE vs IND T20: இந்தியாவின் மோசமான தோல்விக்கு 5 பெரும் காரணங்கள்! இந்த' 2 வீரர்கள் படுமோசம்!