தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய ஒருநாள் அணி அறிவிப்பு! கேப்டன் தவான்.. 2 வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு

By karthikeyan VFirst Published Oct 2, 2022, 7:26 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டதால், ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
 

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து தென்னாப்பிரிக்க அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதலில் டி20 தொடர் நடந்துவருகிறது. இதுவரை இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை  இந்திய அணி வென்றதில்லை. இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, முதல் முறையாக இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டி20 தொடரை வெல்லும் முனைப்பில் ஆடிவருகிறது.

இன்று கவுஹாத்தியில் 2வது டி20 போட்டி நடந்துவருகிறது. இதையடுத்து வரும் 4ம் தேதி இந்தூரில் கடைசி டி20 போட்டி நடக்கிறது. அதைத்தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது.

இதையும் படிங்க - பும்ராவிற்கு நிகரான மாற்றுவீரர் இந்தியாவில் மட்டுமல்ல; உலகத்துலயே இல்ல! இந்திய அணிக்கு பேரிழப்பு- ஷேன் வாட்சன்

அக்டோபர் 6, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் முறையே லக்னோ, ராஞ்சி மற்றும் டெல்லியில் 3 ஒருநாள் போட்டிகள் நடக்கின்றன. வரும் 16ம் தேதி முதல் டி20 உலக கோப்பை தொடங்குவதால் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

கேப்டன் ரோஹித் சர்மா இந்த தொடரில் ஆடவில்லை என்பதால் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தவான் தலைமையிலான இந்திய அணியில்  ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில் ஆகிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றுள்ளனர். ஷ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ராகுல் திரிபாதி ஆகிய வீரர்களும் எடுக்கப்பட்டுள்ளனர். 

ஸ்பின்னர்களாக ஷபாஸ் அகமது, குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய் ஆகிய மூவரும்,  ஃபாஸ்ட் பவுலர்களாக ஷர்துல் தாகூர், ஆவேஷ் கான், தீபக் சாஹர், முகமது சிராஜ் ஆகியோரும் எடுக்கப்பட்டுள்ளனர்.

ரஜத் பட்டிதார் மற்றும் முகேஷ் குமார் ஆகிய 2 வீரர்கள் இந்திய ஒருநாள் அணியில் முதல் முறையாக எடுக்கப்பட்டுள்ளனர். ஐபிஎல்லில் ஆர்சிபிக்காக மற்றும் உள்நாட்டு போட்டிகளில் அபாரமாக பேட்டிங் ஆடிய ரஜத் பட்டிதாருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. அதேபோல முகேஷ் குமார் என்ற ஃபாஸ்ட் பவுலர் முதல் முறையாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க - புவனேஷ்வர் குமாரை விட அவர் பன்மடங்கு சிறந்த பவுலர்..! T20 WC-ல் அவரை ஆடவைங்க.. டேனிஷ் கனேரியா அட்வைஸ்

இந்திய ஒருநாள் அணி:

ஷிகர் தவான் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), ரஜத் பட்டிதார், ராகுல் திரிபாதி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷபாஸ் அகமது, ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆவேஷ் கான், தீபக் சாஹர்.
 

click me!