அனுபவமும் இளமையும் கலந்த பயங்கரமான டீம்..! பாகிஸ்தான் டி20 அணி அறிவிப்பு

Published : Aug 21, 2020, 07:28 PM IST
அனுபவமும் இளமையும் கலந்த பயங்கரமான டீம்..! பாகிஸ்தான் டி20 அணி அறிவிப்பு

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.   

பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்துவருகிறது. இதில் 3வது டெஸ்ட் இன்று தொடங்கி நடந்துவருகிறது. இதையடுத்து டி20 தொடர் நடக்கவுள்ளது.

இந்த டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், 17 வீரர்களை கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் முகமது ஹஃபீஸ், ஷோயப் மாலிக், முகமது ஆமீர் ஆகிய சீனியர் வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். 

ஃபகார் ஜமான், இமாத் வாசிம், நசீம் ஷா, ஷாஹீன் அஃப்ரிடி ஆகிய இளம் வீரர்களும், முன்னாள் கேப்டன் சர்ஃபராஸ் அகமது ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

17 வீரர்களை கொண்ட பாகிஸ்தான் டி20 அணி:

பாபர் அசாம்(கேப்டன்), ஃபகார் ஜமான், ஹைதர் அலி, ஹாரிஸ் ராஃப், இஃப்டிகார் அகமது, முகமது ஹஸ்னைன், முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), முகமது ஆமீர், நசீம் ஷா, சர்ஃபராஸ் அகமது, ஷதாப் கான், ஷாஹீன் அஃப்ரிடி, ஷோயப் மாலிக், வஹாப் ரியாஸ்.
 

PREV
click me!

Recommended Stories

T20 World Cup: இந்திய அணியின் துணை கேப்டனை தூக்கி எறிந்தது ஏன்..? ரகசியம் உடைத்த தேர்வுக்குழு
T20 உலகக்கோப்பை 2026: இந்திய அணி அறிவிப்பு.. சஞ்சு இன், கில் அவுட்.. BCCI அதிரடி