இலங்கை அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்றின் 5ஆவது போட்டியில் பாகிஸ்தான் 42 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் குவித்துள்ளது.
கொழும்பு மைதானத்தில் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், இதற்கு இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை ரத்து செய்திருக்கலாம் என்று ரசிகர்கள் கூறும் அளவிற்கு இருக்கிறது. ஆசிய கோப்பை சூப்பர் சுற்றின் 5ஆவது போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.
ஒரே வருடத்தில் 2 திருமணம்: 2ஆவது முறையாக திருமணத்திற்கு தயாராகும் ஷாஹீன் அஃப்ரிடி!
பிற்பகல் 3 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டியானது கனமழை காரணமாக மாலை 5.15 மணிக்கு தொடங்கப்பட்டது. அதுமட்டுமின்றி 5 ஓவர்கள் குறைக்கப்பட்டு 45 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட்டிங் ஆடுவதாக அறிவித்தார். கண்டிப்பாக இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்த பாகிஸ்தான் இதுவரையில் அணியில் எந்த மாற்றமு செய்யவில்லை. ஆனால், இந்தியாவிற்கு எதிரான போட்டியின் போது அடைந்த தோல்வி மற்றும் வீரர்கள் காயம் காரணமாக இந்தப் போட்டியில் 5 மாற்றங்களை செய்துள்ளார்.
பாகிஸ்தான் அணியில் ஹரிஷ் ராஃப், நசீம் ஷா, அகா சல்மான் ஆகியோர் காயமடைந்த நிலையில் இந்தப் போட்டியில் இடம் பெறவில்லை. மேலும், இமாம் உல் ஹக் மற்றும் பஹீம் அஷ்ரப் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில், இந்தப் போட்டியில் எடுக்கப்படவில்லை. மாறாக, அப்துல்லா ஷாஃபிக், முகமது ஹரிஷ், முகமது நவாஸ், முகமது வாசீம் ஜூனியர் மற்றும் ஜமான் கான் ஆகியோர் அணியில் இடம் பெற்றனர்.
Sri Lanka vs India, Fans Fight: இலங்கை தோல்வி: இந்திய ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்ட இலங்கை ரசிகர்கள்!
இதே போன்று இலங்கை அணியிலும் 2 மாற்றங்கள் செய்யப்பட்டது. அதன்படி திமுத் கருணாரத்னே மற்றும் கசுன் ரஜிதா ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக குசல் பெரேரே மற்றும் பிரமோத் மதுஷன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் ஆடியது. தொடக்க வீரர் அப்துல்லா ஷாஃபிக் 69 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் உள்பட 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் பாபர் அசாம் 29 ரன்களில் துனித் வெல்லலகே பந்தில் ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். முகமது ஹரிஷ் 3 ரன்களில் ஆட்டமிழக்க முகமது நவாஸ் 12 ரன்களில் அவுட்டானார். ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் 27.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்து தத்தளித்தது.
இதையடுத்து விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் மற்றும் இப்திகார் அகமது இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடத் தொடங்கினர். இந்த ஜோடி 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தனர். இப்திகார் அகமது 40 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 47 ரன்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். அடுத்து வந்த ஷதாப் கான் 3 ரன்களில் வெளியேற கடைசியாக ஷாஹீன் அஃப்ரிடி களமிறங்கினார்.
Sri Lanka vs Pakistan: நடையை கட்டுமா பாகிஸ்தான்? ரன் ரேட் யாருக்கு சாதகம்?
ஒரு புறம் அதிரடியாக விளையாடிய முகமது ரிஸ்வான், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 12ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். ஒருகட்டத்தில் அவரது எல்பிடபிள்யூ வாய்ப்பையும் இலங்கை வீரர்கள் ரெவியூ எடுக்காமல் கோட்டைவிட்டனர். ஆனால், டிவி ரீப்ளேயில் எல்பிடபிள்யூ சரியான முறையில் காட்டியது. இதையடுத்து அதிரடியாக விளையாடி ரிஸ்வான் கடைசில 73 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 86* ரன்கள் சேர்த்தார்.
இறுதியாக பாகிஸ்தான் 42 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் பந்து வீச்சைப் பொறுத்த வரையில், பிரமோத் மதுஷன் 2 விக்கெட்டும், மஹீஷ் தீக்ஷனா ஒரு விக்கெட்டும், துனித் வெல்லலகே ஒரு விக்கெட்டும், மதீஷா பதிரனா 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.